Sanchar Saathi: அனைத்து போன்களிலும் கட்டாயம் : மத்திய அரசு அதிரடி

Sanchar Saathi Mobile App Launch : சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவ, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
central government has issued an order to smartphone companies to install the Sanchar Saathi app on new cell phones
central government has issued an order to smartphone companies to install the Sanchar Saathi app on new cell phones
1 min read

சஞ்​சார் சாத்தி செயலி

Sanchar Saathi Mobile App Launch By Central Govt : உலகின் மிகப்​பெரிய தொலைத்​தொடர்பு சந்​தைகளில் ஒன்​றாக இந்​தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் மட்​டும் 120 கோடி சந்​தா​தா​ரர்​கள் உள்​ளனர். இந்த நிலை​யில், சைபர் பாது​காப்​புக்​காக மத்​திய அரசு தனியாக சஞ்​சார் சாத்தி செயலியை அறிமுகப்படுத்தியது.

புதிய போன்களில் கட்டாயம்

இவற்றை புதிய போன்​களில் நிறு​விய பிறகே விற்​பனைக்கு அனுப்ப வேண்​டும். இதனை முன்​னணி ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​கள் 90 நாட்​களுக்​குள் உறுதி செய்ய வேண்​டும் என்று மத்​திய அரசு உத்தரவிட்டுள்ளது. சஞ்​சார் சாத்தி செயலி ஜனவரி​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

ஸ்மார்ட்போன்கள் மீட்பு

அன்​றி​லிருந்து இன்று வரை சுமார் 7 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட தொலைந்து போன செல்போன்​களை இந்த செயலி கண்​டு​பிடிக்க உதவி​யுள்​ளது. அக்​டோபரில் மட்​டும் இந்த செயலி உதவி​யுடன் 50,000 ஸ்மார்ட்​போன்​கள் மீட்​கப்​பட்​டுள்​ள​து.

பொதுமக்களுக்கு சேவை

சஞ்​சார் சாத்தி இந்​திய தொலைத்​தொடர்​புத் துறை​யின் சிறப்பான ஒரு முயற்​சி​யாகும். இது குடிமக்​களுக்கு செல்போன் பாது​காப்பு மற்​றும் விழிப்​புணர்வை மேம்​படுத்த ஒரு வெப் போர்ட்​டல் மற்​றும் செல்போன் செயலியை வழங்​கு​கிறது. இது பயனர்​கள் தொலைந்து போன அல்​லது திருடப்​பட்ட தொலைபேசிகள் குறித்து புகாரளிக்​க​வும், மோசடிகளை தடுக்​க​வும், அரசு தொடர்​பான பிற குடிமக்​கள் சேவை​களை அணுக​வும் அனு​ம​திக்​கிறது.

எதிர்க்கும் ஆப்பிள் நிறுவனம்

மத்​திய அரசு பிறப்​பித்​துள்ள இந்த புதிய உத்​தரவை சாம்​சங், விவோ, ஓப்​போ, ஷாவ்மி நிறு​வனங்​களு​டன் சேர்ந்து ஆப்​பிளும் பின்​பற்ற வேண்​டிய கட்​டா​யம்(Sanchar Saathi Mandatory in All Mobile Phones)​ ஏற்​பட்​டுள்​ளது. ஏற்கனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் ஆப்பிள் நிறுவனம் மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in