”நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்” : உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000...!

நீதிமன்றங்களில் ஆயிரக் கணக்கான வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கி கிடப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Central Government has stated that thousands of cases have been pending in courts for several years
Central Government has stated that thousands of cases have been pending in courts for several yearsAI generated
1 min read

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்

நாடாளு​மன்​றத்​தில் எழுப்​பப்​பட்ட கேள்வி ஒன்​றுக்கு மத்​திய சட்​டத் துறை அமைச்​சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, “நீதி​மன்ற உள்​கட்​டமைப்பு, மேம்​பாட்​டிற்​காக 2011ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் செல​விடப்​பட்​டுள்​ளது.

தேங்கிக் கிடக்கும் வழக்குகள்

ஆனாலும், உச்ச நீதி​மன்​றத்​தில் 10,000-க்​கும் அதி​க​மான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன. இதில் 558 வழக்குகள் 20 ஆண்​டு​களை​யும், 26 வழக்​கு​கள் 30 ஆண்டுகளையும் கடந்துவிட்டன.

உயர் நீதிமன்றங்களிலும் நிலுவையில் வழக்குகள்

25 உயர் நீதி​மன்​றங்​களில் 80,000-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாகத் தேங்​கிக் கிடக்​கின்​றன. போதிய நீதிப​தி​கள் மற்​றும் பணி​யாளர்​கள் இல்​லாதது, உள்​கட்​டமைப்பு வசதி​கள் மற்​றும் வழக்​கு​களின் சிக்கலான தன்​மையே விசா​ரணை வேகத்​தைத் தீர்மானிக்கின்றன.

நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன

தற்​போது உயர் நீதி​மன்​றங்​களில் அனு​ம​திக்​கப்​பட்ட 1,122 நீதிபதி பணி​யிடங்​களில் 341 இடங்​கள் காலி​யாக உள்​ளன. அதே​போல, கீழமை நீதி​மன்​றங்​களில் உள்ள 30,868 அனு​ம​திக்​கப்​பட்ட பணி​யிடங்​களில் 7,311 இடங்​கள் காலி​யாக உள்​ளன.

நீதிப​தி​களை நியமிப்​ப​தில் உயர் நீதி​மன்ற கொலீஜி​யங்​கள் காட்​டும் தாமதமே இதற்குக் காரண​மாக அமை​கிறது. 5 ஆண்​டு​களுக்​கும் மேலாக நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரைந்து முடித்து வைப்​ப​தற்காக, 25 உயர் நீதி​மன்​றங்களி​லும் மற்​றும் மாவட்ட நீதிமன்றங்களி​லும் ‘நிலுவை வழக்​கு​கள் தீர்​வுக்​குழுக்​கள்’ அமைக்​கப்​பட்​டுள்​ளன.

சட்டத் திருத்தங்கள்

வழக்​கு​களின் தேக்​கத்​தைக் குறைக்​கும் நோக்​கில் அரசு பல்​வேறு முக்​கியச் சட்​டத் திருத்​தங்​களைக் கொண்டு வந்​துள்​ளது. அதன்​படி, 2023- ஆண்​டின் புதிய குற்​ற​வியல் சட்​டங்​கள், காசோலை உள்​ளிட்ட மாற்​று​முறை ஆவணங்​கள் திருத்​தச் சட்​டம் (2018)...

வணிக நீதி​மன்​றங்​கள் திருத்​தச் சட்​டம் (2018) மற்​றும் குறிப்பிட்ட பரி​காரத் திருத்​தச் சட்​டம் (2018) ஆகியவை இயற்றப்பட்டு நடை​முறைப்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு மத்​திய அமைச்​சர்​ விளக்கம் அளித்துள்ளார்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in