LPGல் 20% DME எரிவாயு கலந்து விற்பனை! தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த தமிழர் : இறக்குமதி குறையும், தட்டுப்பாடு நீங்கும்..

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க எல்பிஜி-யில் 20% டிஎம்இ காஸ் கலந்து விற்பனை செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
central government is considering selling LPG mixed with 20% TME gas to alleviate the shortage of cooking gas
central government is considering selling LPG mixed with 20% TME gas to alleviate the shortage of cooking gasgoogle
2 min read

வெளிநாடுகளை நம்பி இருக்கும் இந்தியா

20% DME-LPG Blend Can Cut Fuel Imports By 6.3 MT, Save Rs 34,200 Crore A Year : இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் தேவை​யில் 85 சதவீதம் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. இதே​போல நாட்​டின் எல்​பிஜி சமையல் எரிவாயுவில் 60 சதவீதம் இறக்​குமதி செய்யப்படு​கிறது.

கடும் தட்டுப்பாடு

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், சமையல் எரிவாயுவுக்கு கடுமை​யான தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. சமையல் எரிவாயு தட்​டுப்​பாட்​டுக்கு தீர்வு காண உள்​நாட்​டில் எல்​பிஜி உற்​பத்தி அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது.

எத்தனால் கலப்பது கட்டாயம்

அமெரிக்​கா, அங்கோலா உள்​ளிட்ட நாடு​களில் இருந்து எல்​பிஜி எரிவாயு இறக்குமதி செய்​யப்​பட்டு வரு​கிறது. ஏற்​கெனவே நாடு முழு​வதும் பெட்ரோலில் 20 சதவீதம் அளவுக்கு எத்​த​னால் கலப்​பது கட்டாயமாக்​கப்​பட்டு உள்​ளது.

இதன்​மூலம் கச்சா எண்​ணெய் இறக்​குமதி கணிச​மாக குறைந்​து, பெட்​ரோல் தட்​டுப்​பாடு பிரச்சினைக்​கும் எளிய முறை​யில் தீர்வு காணப்​பட்டு உள்​ளது.

எல்பிஜியில் டிஎம்ஐ எரிவாயு

இதே​போல எல்​பிஜி சமையல் காஸில் 20 சதவீதம் டிஎம்இ காஸை கலக்க மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. இதன் ​மூலம் எல்​பிஜி இறக்​கும​தியை கணிச​மாக குறைக்க முடி​யும் என்று பெட்ரோலியத் துறை தெரி​வித்​துள்​ளது.

செயற்கை எரிவாயு டிஎம்இ

டைமெத்​தைல் ஈதர் (டிஎம்இ) என்​பது ஒரு செயற்கை எரி​வாயு. இயற்கை எரி​வா​யு, நிலக்​கரி வாயு​வாக்​கம் ஆகிய​வற்​றின் மூலம் டிஎம்இ காஸ் உற்பத்தி செய்​யப்​படு​கிறது. இது தூய்​மை​யான எரி​வாயு ஆகும்.

காற்றுமாசு குறைவு

எல்​பிஜி உடன் ஒப்​பிடும்​போது டிஎம்இ காஸ் எரி​யும்​போது புகை, நைட்​ரஜன் ஆக்​ஸைடு, கந்தக ஆக்​ஸைடு ஆகியவை மிகக் குறை​வாக வெளி​யேறும்.

மும்பையை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் நியூ ஏரா கிளீன்​டெக் சொல்​யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறு​வனம் நிலக்கரி வாயு​வாக்​கம் மூலம் டிஎம்இ காஸை உற்​பத்தி செய்து வரு​கிறது.

தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

இதே​போல மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த மத்​திய அரசின் சிஎஸ்​ஐஆர்- என்​சிஎல் நிறு​வனம், மெத்​த​னாலில் இருந்து டிஎம்இ காஸை உற்​பத்தி செய்​யும் தொழில்​நுட்​பத்​தை கண்​டு​பிடித்​து உள்​ளது.

தமிழர் தலைமையில் குழு

மகாராஷ்டிராவின் புனே நகரில் மத்​திய அரசின் சிஎஸ்ஐஆர் - என்​சிஎல் நிறு​வனம் செயல்​படு​கிறது. அங்கு முதன்மை விஞ்​ஞானி​யாக உள்ள தமிழகத்​தின் பவானி பகு​தியை சேர்ந்த ராஜா திரு​மலைச்​சாமி தலை​மையி​லான குழு மெத்தனாலில் இருந்து டிஎம்இ காஸை தயாரிக்​கும் தொழில்​ நுட்பத்தை கண்​டறிந்து உள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு நீங்கும்

டிஎம்இ எரிவாயுவை எல்பிஜி எரிவாயுவுடன் 20 சதவீதம் கலந்து விற்பனை செய்வது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதன் மூலம், உள்நாட்டு தேவையை பெரிய அளவில் சமாளிக்க முடியும். தட்டுப்பாட்டையும் நீக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இறக்குமதி குறையும்

இவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு 6.3 மெட்ரிக் டன் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுவது குறையும், 34,200 கோடி ரூபாய் மிச்சமாகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

=====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in