ரேஷன் விநியோகத்தில் டிஜிட்டல் டோக்கன் முறையை அமல்படுத்துகிறது மத்திய அரசு

ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க டிஜிட்டல் டோக்கன் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த உ ள்ளது
Central government is implementing the digital token system
Central government is implementing the digital token system google
1 min read

இத்திட்டதிற்கான நோக்கம்

யூனியன் பிரதேசங்களில் ரேஷன் விநியோக முறையில் பெரிய மாற்றமாக “டிஜிட்டல் டோக்கன்” முறை உருவெடுத்துள்ளது . பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியத்தை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

தற்போது பல இடங்களில் ரேஷன் பெற கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், இந்த புதிய முறை ஒரு சீர்திருத்தமாக அமையும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

இந்த டிஜிட்டல் டோக்கன் முறை எவ்வாறு செயல்படும்

இந்த திட்டத்தின் படி, பயனாளிகள் முன்கூட்டியே டோக்கனை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் ,அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை இந்த டிஜிட்டல் முறையில் நம்மால் பெற்றுகொள்ள முடியும்.

இதனால் ஒரே நேரத்தில் அதிக மக்கள் கூடுவது தவிர்க்கப்படும். மேலும், நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தும் வசதியும் கிடைக்கும்.

இதனை எவ்வாறு பெறுவது

பயனாளிகள் மொபைல் ஆப், SMS அல்லது ஆன்லைன் தளங்கள் மூலம் டிஜிட்டல் டோக்கனைப் பெறகொள்ள முடியும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட நேரம் ஒதுக்கப்பட்டு,

அந்த நேரத்தில் மட்டுமே ரேஷன் பெற அனுமதி வழங்கப்படும். இது ரேஷன் கடைகளில் எற்படும் கால தாமதத்தையும் ,ஒழுங்கையும் கட்டுப்படுத்தும்

2026க்குள் அமலுக்கு வருகிறது

இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்படவில்லை ஆனால் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த டிஜிட்டல் டோக்கன் முறை அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதற்கட்டமாக எங்கு அமலுக்கு வரும்

இந்த டிஜிட்டல் டோக்கன் முறை முதற்கட்டமாக புதுச்சேரி ,Puducherry மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவான் யூனியன் பிரதேசங்களில் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in