”நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்” : மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதா : எதிர்கட்சிகளிடம் ஆதரவை திரட்டும் BJP..!

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்களை நிறைவேற்ற விரைவில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
central government keen to convene special session of Parliament soon to pass Women's Reservation
central government keen to convene special session of Parliament soon to pass Women's Reservationsource:thamizhalai,ai generated
2 min read

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நீண்டகாலமாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

போதிய பலம் இல்லை - நிறைவேறாத மசோதா

ஏப்ரல் மாதம் 17ம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தது.

அவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லாத காரணத்தால் அந்த மசோதா எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது.

இதையடுத்து ஆகஸ்ட் 13ம் தேதியுடன் முடிவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் ‘நீட்’ வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மசோதாவை மீண்டும் கொண்டுவர முடியாமல் போனது.

மத்திய அரசு அதிரடி வியூகம்

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை எப்படியாவது நிறைவேற்ற மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தற்போது மீண்டும் அதிரடி வியூகங்களை வகுத்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்

இதற்காக நடப்பு மாதத்தின் இறுதியில் நாடாளுமன்றத்தின் அவசர சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதற்கு தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

26ம் மற்றும் 27ம் தேதிகளில் நாடாளுமன்றத்தின் ‘சம்விதான் சதன்’ கட்டிடத்தில் 12வது பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் சர்வதேச மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, அந்த மாநாட்டுக்கு முன்னதாக சிறப்பு கூட்டத்தொடரை நடத்த திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் ஒரு வார காலத்திற்கு முன்பாக அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுடனும் ஆலோசனை

முக்கியமாக, சமீபத்திய சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளிடமிருந்து ஆதரவை பெற ஒன்றிய அரசு தற்போது தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனால் நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் திருப்பங்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

3ல் 2 பங்கு ஆதரவு தேவை

அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை அவையில் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டுமென்றால், வருகை தந்து வாக்களிக்கும் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு கட்டாயம்.

தற்போதைய நிலவரப்படி, 540 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும், மூன்றில் இரண்டு பங்குக்கு தேவையான 360 உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் எட்டப்படவில்லை.

திரிணாமூல், சிவசேனா ஆதரவு

இருப்பினும், கடந்த கூட்டத்தொடருக்குப் பின்னர் ஆளும் தரப்பின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 20 எம்.பி.க்களும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்களும் ஆளும் அணிக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.

ஆதரவு தருவாரா சரத்பவார்

அதேவேளையில், 8 எம்.பி.க்களை வைத்துள்ள சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி எண்ணிக்கையை நாடு முழுவதும் 50 சதவீதம் வரை உயர்த்துவதற்கான உத்தரவாதம் சட்டத்தில் சேர்க்கப்படும் பட்சத்தில் ஆதரவு தரப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான சுப்ரியா சுலே எம்.பி. ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எஞ்சியிருக்கும் கூடுதல் எம்.பி.க்களின் ஆதரவையும் ஒருங்கிணைத்து, மகளிர் மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்ற மத்திய அரசு முழுவீச்சில் களம் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in