

ஏஐ வளர்ச்சி
Central Government AI New Rules : ஏஐ தொழில் தொடர்ந்து இன்று பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தொழில் சார்ந்து, மனிதர்கள் வேலை செய்வதை, ஏஐ-யே செய்து முடிப்பது என்பதால், இன்றளவு பெருமளவு நிறுவனங்களில் பணிபுரியும் மனிதர்களுக்கு வேலை பரிக்கப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. இதனால், ஏஐ ஆதிக்கம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், நன்மைகளை விட ஏஐ-யின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து தீமைகளை ஊக்குவித்து வருவதும் அதிகமாகியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும்
இந்நிலையில், ஏஐ பிரயோகப்படுத்துபவருக்கு மத்திய அரசு சில விதிமுறைகளை விதித்துள்ளது. இனி AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் எந்தவொரு புகைப்படம், வீடியோ அல்லது ஆடியோ பதிவிலும், அது செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது சித்தரிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கும் வகையில் Watermark இருக்க வேண்டும்.
பயனாளர்கள் அந்த Watermarkஐ அழிக்கவோ அல்லது மறைக்கவோ முடியாதபடி இருக்க வேண்டும்.ChatGPT, Gemini மற்றும் Grok போன்ற AI சேவைகள், இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியை பயனாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சட்ட நடவடிக்கை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்கள், போலி ஆவணங்கள் அல்லது சமூக அமைதியை குலைக்கும் செய்திகளைப் பரப்பினால், இந்திய குற்றவியல் சட்டம், போக்ஸோ சட்டம் மற்றும் தேர்தல் விதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் கிரிமினல் நடவடிக்கை பாயும் என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் பயனாளர்களின் கணக்குகளை தற்காலிகமாக முடக்குவது, அபராதம் விதிப்பது அல்லது நிரந்தரமாக நீக்குவது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுக்க வேண்டும்.
ஏஐ சிக்கலுக்கு உடனடி தீர்வு
அரசின் உத்தரவு இதுவரை சமூக வலைதள நிறுவனங்கள், அரசு அல்லது காவல்துறையின் புகார்களுக்கு பதிலளிக்க 36 மணி நேரம் அவகாசம் இருந்தது. ஆனால், புதிய விதிகளின்படி இந்த நேரம் வெறும் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பிரச்சனைக்குரிய பதிவு குறித்து அரசு தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் 3 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். அதேபோல், பயனாளர்களின் புகார்களை தீர்ப்பதற்கான காலக்கெடுவும் குறைக்கப்பட்டுள்ளது. அவசர தன்மை வாய்ந்த புகார்களுக்கு 72 மணி நேரத்திற்கு பதிலாக 36 மணி நேரத்திற்குள் தீர்வு காண வேண்டும் என்று தெரியவந்துள்ளது.
குற்ற சம்பவங்களை தடுக்கவே இந்த விதிமுறை
சில மிக அவசரமான நேரங்களில் 2 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் சர்ச்சை சமீபத்தில் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம் அறிமுகப்படுத்திய Grok என்ற AI வசதியை, சில நபர்கள் தவறாக பயன்படுத்திப் பிரபலங்களின் போலி ஆபாச படங்களை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.