

நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புதிய மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் சிறப்புக் கூட்டத்தொடரில் மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முன்மொழிவின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும்.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் தற்போது உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 59 ஆக அதிகரிக்கலாம். அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் 80-ல் இருந்து 120 ஆகவும், மகாராஷ்டிராவில் 48-ல் இருந்து 72 ஆகவும், மேற்கு வங்கத்தில் 42-ல் இருந்து 63 ஆகவும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலா
புதிய மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, மாநிலங்களுக்கு இடையிலான மக்களவைத் தொகுதி ஒதுக்கீட்டின் தற்போதைய விகிதத்தை 2051-க்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள் தொகை
கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியாகும் வரை பாதுகாக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
மேலும், குறைந்தது பாதி மாநிலங்களின் ஒப்புதலும் அவசியம். எனவே, மசோதா அறிமுகப்படுத்தப்படுவது மட்டுமே தொகுதிகளின் எண்ணிக்கை உடனடியாக அதிகரிப்பதை உறுதி செய்யாது.
====================