செப்.7ம் தேதி ’முழு சந்திர கிரகணம்’ : வெறும் கண்களால் பார்க்கலாம்

Lunar Eclipse 2025 Date And Time in Tamil : செப்டம்பர் 7ம் தேதி நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lunar Eclipse 2025 Date And Time in Tamil
Lunar Eclipse 2025 Date And Time in Tamil
1 min read

சந்திர கிரகணம் 07-09-2025 :

Lunar Eclipse 2025 Date And Time in Tamil : வானியல் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகும். பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது நிகழ்வது சந்திர கிரகணம்(Lunar Eclipse). பூமியின் நிழலானது சந்திரனின் மேல் விழும் நிகழ்வைத்தான் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். சந்திர கிரகணம், ஒரு முழு நிலவு நாளில் அதாவது, பவுர்ணமி அன்று நிகழும்.

82 நிமிடங்கள் சந்திர கிரகணம் :

அதன்படி, வருகிற 7ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது(Chandra Grahanam 2025 Date And Time in Tamil). அன்று இரவு இரவு 9.57 மணிக்கு பூமியின் நிழலால் சந்திரன் மறைய தொடங்கும். இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை அதாவது, 82 நிமிடங்கள் நீடிக்கும். பின்னர் அதிகாலை 1.27 மணியில் இருந்து சந்திரன் பூமியின் நிழலை விட்டு வெளியேறிவிடும்.

சிவப்பாக காட்சியளிக்கும் சந்திரன் :

சந்திரன் முழு கிரகணம் அடையும்போது, வானத்தில் அது மறைந்துவிடாது. மாறாக அந்த நேரத்தில் அடர் சிவப்பு நிறத்தில் மிக அழகாக தோன்றும். சிவப்பு நிலவாக சந்திரன் அற்புதமாக காட்சி தரும். இதற்கு காரணம் என்னவென்றால், சூரியனிடம் இருந்து வரும் ஒளி கதிர்களான சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா ஆகிய 7 வண்ணங்களில் சிவப்பு நிறம் ஒளி சிதறல் குறைவாகவும், அதே நேரத்தில் அதனுடைய அலை நீளம் அதிகமாகவும் இருக்கும். இது பூமியின் வளிமண்டலத்தின் மீது மோதும்போது ஒளிவிலகல் அடைகிறது. இதன் காரணமாகவே சந்திரன் சிவப்பு நிறமாக மாறுகிறது.

வெறும் கண்ணால் பார்க்கலாம் :

வானம் தெளிவாக இருந்தால் சந்திர கிரகணம் தொடங்கி நிறைவடையும் வரை அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.

மேலும் படிக்க : Chandra Grahanam 2025 : சிவப்பு நிலா: செப்.7ல் முழு சந்திர கிரகணம்

இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால்() பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், இதை பார்ப்பதால் எந்த தீங்கும் ஏற்படாது என்றும், இந்த இயற்கையான, அழகான, அற்புதமான நிகழ்வை கண்டு ரசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

==========================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in