Express HIghway : ”அக்டோபரில் முழுமையாக திறப்பு, ”சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை” : பயண நேரம் மூன்று மணி மட்டுமே...!

சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஹைவே பணிகள் அக்டோபரில் முழுமையாக நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 Chennai-Bengaluru Expressway project will be fully completed and opened for use in October
Chennai-Bengaluru Expressway project will be fully completed and opened for use in OctoberAI generated
1 min read

சென்னை - பெங்களூரு நகரங்கள்

தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெருநகரங்கள் சென்னை - பெங்களூரு. வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நகரங்களை அதிவிரைவு சாலை மூலம் இணைப்பது, போக்குவரத்தை மேலும் எளிமையாக்கும்.

‘எக்ஸ்பிரஸ் ஹைவே’

இவற்றை இணைக்கும் வகையில், ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ எனப்படும் அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள கடந்த 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ரூ.17,930 கோடி திட்டப் பணிகள்

நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் முடிந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.17,930 கோடி மதிப்பில் 2022 மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

கர்நாடகாவில் பணிகள் நிறைவு

10 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. 263 கி.மீ. தூரம் கொண்ட இந்த விரைவு சாலையில், கர்நாடக எல்லைக்கு உட்பட்ட 71 கி.மீ. நீளமுள்ள ஹோஸ்கோட்டே - பெத்தமங்களா வரையிலான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து.போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 90% பணிகள் முடிந்தன

ஆந்திரப் பகுதிகளிலும், தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிகளிலும் 90 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் - அரக்கோணம் - காஞ்சிபுரம் வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்துதல், ரயில்வே மேம்பால அனுமதி, ஒப்பந்ததாரர்களின் நிதி நெருக்கடி காரணமாக பணிகள் சுணக்கமடைந்தன.

அக்டோபருக்குள் முடிக்க இலக்கு

இதுவரை 230 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

25 கி.மீ. தூரப் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும், அக்டோபருக்குள் பணிகள் நிறைவடையும்.

3 மணி நேரத்தில் செல்லலாம்

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு சாலை மார்க்கமாகச் செல்ல தற்போது 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்றனர்.

அக்டோபரில் பணிகள் நிறைவேற்றபட்டு, முழு அளவில் எக்ஸ்பிரஸ் ஹைவே பயன்பாட்டிற்கு வந்தால், பொதுமக்கள் எளிதாக, விரைவாக பயணிக்கலாம். சரக்கு போக்குவரத்தும் சிறப்பாக இருக்கும்.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in