2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய் : பிரதமர் மோடி, ராகுலுடன் சந்திப்பு : JNUல் திருவள்ளுவர் சிலை திறப்பு

முதல்வராக பதவியேற்றப் பிறகு முதல் முறையாக டெல்லிக்கு செல்கிறார் முதல்வர் விஜய்
Chief Minister Vijay  for Delhi on two-day visit, meets PM, Rahul
Chief Minister Vijay for Delhi on two-day visit, meets PM, Rahul google
1 min read

பிரதமருடன் முதல்வர் சந்திப்பு

தமிழக முதல்வராக விஜய் பங்கேற்ற பிறகு முதல் முறையாக பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர்

முதல்வராக பங்கேற்று , முக்கிய தலைவர்களை சந்திக்கும் விஜய்

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றி வெற்றி கண்டுள்ளத். மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், டில்லி சென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை முதல்வர் சந்திப்பது மரபு.

நிதி மற்றும் நிர்வாகரீதியாக மத்திய அரசின் ஒத்துழைப்பும், மாநில முதல்வருக்கு மிகவும் அவசியம் என்பதால் பிரதமர் மற்றும் இதர அமைச்சர்களை சந்திப்பானது வழக்கமாக நடைபெறும்

டெல்லியில் முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் விஜய்

இதன் காரணமாகவே, முக்கிய திட்டங்கள் குறித்த கோரிக்கைகளுடன், டெல்லியில் உள்ள அதிகார மையங்களை முதல்வர்கள் சந்தித்து வலியுறுத்துவர். அந்த வகையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நாளை (மே 27) விஜய் டெல்லிக்கு செல்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சந்திப்பு

இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய் , மத்திய அரசிடம்

தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவ்ல் வெளியாகி உள்ளது .காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் விஜய் சந்திக்க இருக்கிறார்

சிலையை திறந்து வைக்கும் ,முதல்வர்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க இருக்கிறார் விஜய்

மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை முன் வைக்கும் விஜய்

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள முதலமைச்சர் விஜய் மாநில உரிமைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை எழுப்ப உள்ளாராம். அதில் நீண்ட நாட்களாக உள்ள கல்வி நிதி, மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், நிதி விடுவிப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளதாம்.

ஜி.எஸ்.டி. பங்கீட்டை தாமதமின்றி விரைந்து வழங்குவது, மத்திய மாநில அரசுகள் இணைந்து முன்னெடுக்கும் திட்டங்களுக்கான நிதியை வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

இதுபோக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்பது குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

=============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in