முதல்வர் விஜய் நிதியமைச்சர் சந்திப்பு :,மெட்ரோ திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க கோரிக்கை

டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை முதல்வர் விஜய் சந்திக்காதது குறிப்பிடதக்கது
Chief Minister Vijay: Meeting with Finance Minister allocating necessary funds for Metro project
Chief Minister Vijay: Meeting with Finance Minister allocating necessary funds for Metro project google
1 min read

முதல்வராக பங்கேற்று , முக்கிய தலைவர்களை சந்திக்கும் விஜய்

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றி வெற்றி கண்டுள்ளத். மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், டில்லி சென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை முதல்வர் சந்திப்பது மரபு.

நிதி மற்றும் நிர்வாகரீதியாக மத்திய அரசின் ஒத்துழைப்பும், மாநில முதல்வருக்கு மிகவும் அவசியம் என்பதால் பிரதமர் மற்றும் இதர அமைச்சர்களை சந்திப்பானது வழக்கமாக நடைபெறும்

டெல்லியில் முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் விஜய்

இதன் காரணமாகவே, முக்கிய திட்டங்கள் குறித்த கோரிக்கைகளுடன், டெல்லியில் உள்ள அதிகார மையங்களை முதல்வர்கள் சந்தித்து வலியுறுத்துவர். அந்த வகையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நாளை (மே 27) விஜய் டெல்லிக்கு செல்கிறார்.

நிதி அமைச்சருடன் சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகள் முன்வைப்பு

இச்சந்திப்பின்போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால்,

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவிட வேண்டும் என்றும்

ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் நிதியமைச்சரிடம் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in