H-1B விசாவுக்கு செக், சீனாவின்” K விசா” : இளைஞர்களை கவர சலுகைகள்

அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கு போட்டியாக சீனா கே விசாவை அறிமுகம் செய்து அசத்தி இருக்கிறது.
China introduced K visa to compete with US H1B visa
China introduced K visa to compete with US H1B visa
1 min read

அமெரிக்காவின் H-1B விசா :

China has introduction of new "K visa" aimed to attracting young and talented professionals : அமெரிக்காவில் திறமை வாய்ந்த வெளிநாட்டவர் பணியாற்ற H-1B விசா வழங்கப்படுகிறது. இதன் கட்டணத்தை கடந்த வாரம் அதிரடியாக உயர்த்தினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதன்படி விசா கட்டணம் 100,000 டாலராக உயர்ந்தப்பட்டு இருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.88 இலட்சம் ஆகும். இதற்கு முன்பு வெறும் 215 டாலராக இருந்த விசா கட்டணம் தற்போது 460 மடங்கு வரை உயர்தப்பட்டு இருக்கிறது.

இந்திய இளைஞர்கள் அதிகம் பாதிப்பு :

இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியர்கள் தான் என ஆய்வறிக்கை கூறுகிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 71% க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச்சூழலில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் விதமாகசீனா தனது தொழில்துறையை வலுப்படுத்த புதிய K விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவின் கே விசா, சலுகைகள் :

இதன் காரணமாக அமெரிக்காவில் பணிபுரியும்வெளிநாட்டு ஊழியர்கள் சீனாவில் பணியாற்றுவதற்கு ஆர்வம் காட்டி அங்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

STEM என்ற பெயரில் K விசா வழங்கப்பட உள்ளது. இதன்படி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாட்டவர்களை ஈர்க்க சீனா முடிவு செய்துள்ளது.

அக்டோபர் 1 முதல் கே விசா :

அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் சீனாவின் K விசா அமலுக்கு வரவுள்ளது. இதன்மூலம் வருகிற 2035 ஆம் ஆண்டுக்குள் சீனாவை தொழில்நுட்ப உலகில் அதிசக்தி வாய்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு சீனாவில் வாய்ப்பு :

சர்வதேச அளவில் வெளிநாட்டவருக்கான விசா விதிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சீனாவின் K விசா பெரும் நிம்மதியை அளித்து இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் சீனா இடையே நட்புறவு மேம்பட்டுள்ளதால், இந்தியர்கள் சீனாவிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

திறமைசாலிகளுக்கு சீனா வாய்ப்பு :

உலகின் பிரபலமான பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் படித்தவர்கள் K விசா பெற விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் இதுதொடர்பான தகவல்களைப் பெற சீன தூதரகங்களை அணுகலாம். சீன அரசின் வழிகாட்டுதல் படி, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in