"நெதர்லாந்திலிருந்து வந்த சோழர் செப்பேடுகள், இந்தியாவுக்கு பெருமை" - பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

ஆனைமங்கலம் செப்பேடுகள் ' இந்தியாவின் பெருமை ', மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
"Chola copper plates from the Netherlands are a source of pride for India" - Prime Minister Modi's resilience speech
"Chola copper plates from the Netherlands are a source of pride for India" - Prime Minister Modi's resilience speech google
1 min read

இந்தியாவிற்கு வந்த ஆனைமங்கலம் செப்பேடுகள்

300 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்திருக்கின்றன. நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் இருந்த இந்த செப்பேடுகளை இந்தியா கொண்டு வர நீண்ட காலமாக இருந்த கோரிக்கை, பிரதமர் மோடி மூலமாக நிறைவேறி இருக்கிறது.

இது குறித்து பிரதமரின் நெகிழ்ச்சி பேச்சு

நெதர்லாந்து நாட்டுக்கு நான் சென்ற பயணம் உணர்வுபூர்வமாக அமைந்தது என்றும் பயணத்தின் போது நடைபெற்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாக உலகெங்கும் வாழும் தமிழ் சமூகத்தினருக்கும் பெருமிதம் சேர்க்கும் தருணமாக அமைந்தது என்று பகிர்ந்துக்கொண்டார்

இந்தியா வந்தடைந்த செப்பெடு: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர்

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சோழர் காலத்து அடையாளங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிய விவகாரத்தில் உலகளாவிய தமிழ் சமூகம் தங்களின் அளப்பரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தி தந்து உரையில் குறிப்பிட்டு பேசினார்

இந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் கூறும் வரலாறு ?

21வது ஆட்சி ஆண்டில் அதாவது கிபி 1005ல், நாகப்​பட்​டினத்​தில் ’விஜய கிடாரத்து அரசன் மாறவிஜயோத்​துங்க வர்​ம​னால் ‘சூளாமணி வர்ம விகாரம்’ என்ற புத்த விகாரம் கட்டித தரப்பட்டது. இதை பராமரிக்க 97 வேலி பரப்பு கொண்ட ஆனைமங்​கலம் கிராமத்தை ராஜ​ராஜ சோழன் தானமாக வழங்கி தனது மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார்.

பட்​ட​யம் வெட்டி உறுதி செய்யப்பட்டதே, செப்பேடுகள்

நிலம் கொடுக்கப்பட்டாலும், அதற்கான பட்டயம் எதுவும் வழங்கப்படவில்லை. 1014ம் ஆண்டு ராஜராஜ சோழன் மறையும் வரை நல தானம் வாய்மொழி உத்தரவாக மட்டுமே இருந்தது.

பின்னர் ஆட்சிக்கு வந்த ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழன், புத்த விகாரத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை, எழுத்​துப் ​பூர்​வ​மாக பட்​ட​யம் வெட்டி உறுதி செய்​தி கொடுத்தார்.

இந்த செப்பேடுகளில் இருப்பது என்ன

இந்த ஆனைமங்கலம் செப்பேடானது 30 கிலோ எடை கொண்ட 21 செப்​பேடு​கள், ஒரு வெண்கல வளை​யத்​தால் பிணைக்​கப்​பட்​டுள்​ளன.வளை​யத்​தில் சோழ அரச முத்​திரை உள்​ளது. 5 ஏடு​கள் வடமொழி​யிலும், 16 ஏடு​கள் தமிழிலும் எழுதப்பட்டு இருக்கின்றன.

மத்திய அரசு நடவடிக்கை

இதன் பலனாக ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்து செப்பேடுகளை, இந்தியாவிடம் ஒப்படைக்க நெதர்லாந்து அரசு முன்வந்தது.

வெளிநாடுகளில் இருக்கும் எந்த விதமான பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றாலும், மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம்.அந்ந வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆனைமங்கலம் செப்பேடுகளை இந்தியா கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது

பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு

இதற்கான பலன், பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் போது கைகூடி வந்திருக்கிறது. ஆனைமங்கலம் செப்பேடுகளை பிரதமரிடம் மோடியிடம் நெதர்லாந்து அரசு முறைப்படி ஒப்படைத்தது.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in