

புகையிலை பொருட்கள் - 40% வரி
Cigarette Prices Increase 2026, effective from February 1 : ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் போது, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. இது தொடர்பானகலால் வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.புகையிலை பொருள்கள் மீது 40% ஜிஎஸ்டி விதிக்க இது வழிவகை செய்கிறது.
பிப்ரவரி 1 முதல் அமல்
இந்த வரிவிதிப்பு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரியை அரசு விதித்துள்ளது. சிகரெட்டின் நீளம் மற்றும் அதன் வகையை பொருத்து கலால் வரி மாறுபடும்.
சிகரெட், புகையிலை விலை உயர்வு
இந்த வரி விதிப்பின் மூலம், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்களின் விலை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பெரியளவில் உயரும். இனி மலிவு விலையில் புகையிலை பொருள்களையோ, பிடியையோ, சிகரெட்டையோ நுகர்வோர் வாங்க இயலாது.
புகையிலை மற்றும் அதன் சார்ந்த பொருள்கள் மீது ஏற்கெனவே 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் நிலையில், அதற்கு மேல் கலால் வரி விதிக்கப்படுகிறது.
7 ஆண்டுகளாக விலையில் மாற்றம் இல்லை
நீளமான சிகரெட்கள் மற்றும் பில்டர் சிகரெட்களுக்கான விலை கடுமையாக உயரும். மத்திய அரசு தயாரிப்பாளர்களுக்கு கலால் வரியை விதிக்கப்படும்போது, தயாரிப்பாளர்கள் வாடிக்கையாளர்களுக்கான விலையையும் ஏற்றுவார்கள். கடந்த 7 ஆண்டுகளாக சிகரெட் மீதான கலால் வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.
புகையிலை விலையும் அதிகரிக்கும்
மெல்லும் புகையிலை, ஜர்தா வாசனை புகையிலை, குட்கா ஆகியவையின் விலை உயரலாம். காரணம் இவற்றின் பேக்கிங் இயந்திரங்களின் எண்ணிக்கை, அதன் வேகம், வெளியீட்டு திறன் மற்றும் தயாரிப்பின் சில்லறை விற்பனை விலை ஆகியவற்றின் அடிப்படையில் கலால் வரி விதிக்கப்படும்.
புதிதாக அறிவிக்கப்பட்ட பேக்கிங் இயந்திர விதிகள், 2026ன் கீழ், அனைத்து மாற்றங்களும் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.
ரூ.2 முதல் ரூ.5 வரை விலை உயரும்
ஜிஎஸ்டி 40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டதால், முன்பு 18 ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்ட 19.70 ரூபாயாக உயரும். இது ஜிஎஸ்டி மட்டுமே. இதற்கு மேல், அரசாங்கம் கூடுதல் கலால் வரியை விதிப்பதால்,
ஒரு சிகரெட்டின் விலை சுமார் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் அளவில் அதிகரிக்கும். இதனால், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நீங்கள் 18 ரூபாய்க்கு வாங்கிய சிகரெட்டின் விலை 21 ரூபாய் - 22 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
சிகரெட் விலையேற்றம் - எப்படி இருக்கும்?
* குட்டையான, வடிகட்டி இல்லாத சிகரெட்டுகள் (65 மிமீ வரை) ஒன்றின் விலை சுமார் 2.05 ரூபாய் உயரும்.
* குட்டையான, வடிகட்டி இருக்கும் சிகரெட்டுகள் (65 மிமீ வரை) ஒன்றின் விலை சுமார் 2.10 ரூபாய் அதிகரிக்கும்
* நடுத்தர நீள சிகரெட்டுகள் (65–70 மிமீ) ஒன்றின் விலை சுமார் 3.6 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயரும்.
* நீண்ட, பிரீமியம் சிகரெட்டுகள் (70–75 மிமீ) ஒன்றின் விலை சுமார் 5.4 ரூபாய் வரை அதிகரிக்கும்.