

என்ஆர் காங்கிரஸ் கூட்டணி
Rs. 2,500 Credited to Accounts of Female Heads of Households in Puducherry : புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து இருக்கிறது.
மகளிருக்கு மாதம் ரூ.1,000
2021ம் ஆண்டு புதுச்சேரியில் பொறுப்பேற்ற என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள (வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் - BPL) குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தது.
புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்ற உடனே, சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள 65,000 குடும்பத் தலைவிகளின் கணக்கில் உயர்த்தப்பட்ட உதவித்தொகை 2500 ரூபாய் நேற்று முதல் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
புதுவை மாநிலத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை அதிரடியாகச் செயல்படுத்தி வருகிறது.
மாதம் ரூ.2,500 - வாக்குறுதி
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்த உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரு மாதங்களுக்கான நிலுவைத் தொகை, தலா ரூ.2,500 வீதம் மொத்தம் ரூ.5,000 தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
என்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை பெற, மீண்டும் முதல்வராகி இருக்கிறார் ரங்கசாமி. 13ம் தேதி முறைப்படி அவர் பதவியேற்றுக் கொண்டார்.
நலத்திட்டங்கள் அமல்
பதவியேற்ற உடனே மக்கள் நலத்திட்டங்களை விரைவுபடுத்திய முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் காலத்தில் அறிவித்தபடி குடும்பத் தலைவிகளுக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை ரூ.2,500-ஐத் தொடர்ந்து வழங்குவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு, அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.
65,000 மகளிருக்கு ரூ.2,500
அதன்படி, சிவப்பு நிற (வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள) ரேஷன் அட்டை வைத்துள்ள சுமார் 65,000 குடும்பத் தலைவிகளுக்கு, உயர்த்தப்பட்ட உதவித்தொகையான ரூ.2,500 அவர்களின் வங்கித் கணக்குகளில் நேரடியாக (DBT முறை மூலம்) வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுவை மாநிலப் பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மஞ்சள் ரேஷன் கார்டுதாரர் எதிர்பார்ப்பு
தேர்தல் பிரசாரத்தின் போது, சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமல்லாமல், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்திருந்தார்.
மகளிர் கோரிக்கை
சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தமக்கான ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு விரைந்து தொடங்க வேண்டும் என்று மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் எப்போது?
தமிழகத்திலும் தவெக அரசு 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை என வாக்குறுதி அளித்து உள்ளது. இந்த மாதம் ஏற்கனவே அமலில் உள்ள 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. விரைவில் 2,500 ரூபாய் வழங்குவதற்கான உத்தரவை முதல்வர் விஜய் பிறப்பிப்பார் எனத் தெரிகிறது.
===================