அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற விஜய் : 4 முக்கிய கோரிக்கை பிரதமரிடம் முன்வைப்பு

தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மை பாடலாக அமைய வேண்டும் எனவும் கோரிகையை முன் வைத்துள்ளார்
 cm  Vijay, who is on a state visit to Delhi, has presented 4 important requests to the Prime Minister.
cm Vijay, who is on a state visit to Delhi, has presented 4 important requests to the Prime Minister. google
2 min read

முதல்வராக பங்கேற்று , முக்கிய தலைவர்களை சந்திக்கும் விஜய்

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றி வெற்றி கண்டுள்ளத். மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், டில்லி சென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை முதல்வர் சந்திப்பது மரபு.

நிதி மற்றும் நிர்வாகரீதியாக மத்திய அரசின் ஒத்துழைப்பும், மாநில முதல்வருக்கு மிகவும் அவசியம் என்பதால் பிரதமர் மற்றும் இதர அமைச்சர்களை சந்திப்பானது வழக்கமாக நடைபெறும்

பிரதமரிடம் முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு

அரசு முறை மற்றும் முதல்வராக பங்கேற்று முதன்முறையாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்திது , தமிழ்நாட்டி வளர்ச்சிக்கு தேவையான் நானகு முக்கிய கோரிக்கைகளை வழங்கியிருக்கிறார்

நான்கு முக்கிய கோரிக்கைகள்

முதல்வர் விஜய் பிரதமரிடம் வழங்கிய நான்கு முக்கிய கோரிக்கைகள்

தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும், காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் முன்வைத்துள்ளார்.

இது குறித்து அரசு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை

மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும்,

உள்துறை அமைச்சகத்தால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும்,

இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.

நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறும்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது என்றும்,

அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்துக்கும், மத்திய நீர்வள ஆணையத்துக்கும் பிரதமர் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக அரசு தரப்பு செய்துகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in