Ant Janata Party : " நேற்று கரப்பான் பூச்சி, இன்று 'எறும்பு ஜனதா கட்சி' : காரணம் என்ன? அசர வைக்கும் பதில்...!

இந்தியாவில் கரப்பான் பூச்சி கட்சி பேசுபொருளாக இருக்கும் நிலையில், உத்தர பிரதேசத்தில் எறும்பு ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி களத்திற்கு வந்திருக்கிறது.
Cockroach Party is the talk of the town in India, a new party called the Ant Janata Party has emerged in Uttar Pradesh.
Cockroach Party is the talk of the town in India, a new party called the Ant Janata Party has emerged in Uttar Pradesh.google
2 min read

காளான்கள் போல முளைக்கும் கட்சிகள்

"Ant Janata Party" is a recent satirical offshoot of the rapidly growing online youth revolt known as the Cockroach Janta Party (CJP). Both of these are digital meme movements rather than traditional political parties : இந்தியாவில் கட்சித் தொடங்குவது புதியு கிடையாது. யார் வேண்டுமென்றாலும் கட்சி துவங்கலாம். அதன்படி, நூற்றுக் கணக்கான கட்சிகள், ஆயிரக் கணக்கான அமைப்புகள் இந்தியாவில் இருக்கின்றன.

இவற்றில் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது என்பது சிலரால் மட்டுமே முடிகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட மற்றும் முக்கியமான கொள்கை இருக்கும்.

கரப்பான் பூச்சி கட்சி

இந்தச்சூழலில் தான் சோசியல் மீடியாவில் தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா பார்ட்டி, கரப்பான் பூச்சி கட்சி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி வைக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, நமது அண்டை நாடுகளிலும் இந்தக் கட்சி பற்றி பேசப்படுகிறது.

எறும்பு ஜனதா பார்ட்டி

இது போதாது என்று விசித்தரமான பெயரில் எறும்பு ஜனதா பார்ட்டி என்று மற்றொரு கட்சி உத்தர பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் பாஜக தலைவரான அனூப் ராகவ், சீந்தி ஜனதா கட்சி (எறும்பு ஜனதா கட்சி) என்ற பெயரில் இந்தக் கட்சியை தொடங்கியுள்ளார்.

எறும்பு பார்ட்டி - பெயர்க்காரணம்

பெயர் கேட்பதற்கு கேலிக்கு ஆளானாலும், அதற்கு அனூப் ராக்வ் கொடுத்து இருக்கும் விளக்கம் அனைவரையும் அசர வைக்கிறது.

முப்பது ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து இருக்கிறார்.

பாஜகவில் இருந்தவரை, ஊழல், சாதாரண மக்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரச்சினைகள் ஆகியவற்றை திறம்பட தடுக்க முடியவில்லை.

எறும்பு ஜனதா கட்சி நோக்கம்

எனவே, சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு வலுவான குரலை வழங்குவதை நோக்கமாக கொண்டு, ஒரு சுதந்திரமான அரசியல் பாதையை வகுக்க முடிவு செய்தே இந்த கட்சியை தொடங்கியுள்ளதாக அனூப் ராகவ் தெரிவித்துள்ளார்.

தீர்க்கப்படாமல் இருக்கும் உள்ளூர் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்துவதோடு, சாதாரண மக்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினருக்காக பாடுபடும் கட்சியாக இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

எறும்பு ஜனதா - பெயர்க் காரணம்

கடின உழைப்பு, ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் விடாமுயற்சி போன்றவற்றுக்கு எடுத்துக்காட்டாக எறும்பு விளங்கி வருகிறது. எனவே, அதன் குணங்களால் ஈர்க்கப்பட்டு, தனது புதிய கட்சியின் பெயரில் எறும்பு என்ற வார்த்தையை சேர்த்து இருப்பதாகவும் அனூப் ராகவ் விளக்கம் அளித்திருக்கிறார்.

2027 தேர்தலில் போட்டி

உத்தரப் பிரதேசத்தில் 2027ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், எறும்பு ஜனதா கட்சி போட்டியிடுவதற்கான திட்டங்களையும் அனூப் ராகவ் வகுத்துள்ளார்.

எறும்பு ஜனதா கட்சியின் தாக்கம் உத்தரப் பிரதேச அரசியல் வட்டாரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

============

logo
Thamizh Alai
www.thamizhalai.in