”கரை சேருமா காங்கிரஸ்” : உ.பி. சீட் பகிர்வில் மோதல் : காங்கிரஸ் டிமாண்ட் 181, அகிலேஷ் ஆஃபர் 25 : கூட்டணி முறிவா...?

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சீட் பகிர்வில், காங்கிரஸ் கட்சி 181 இடங்களை எதிர்பார்க்க, 25 சீட்கள் மட்டும் தான் தர முடியும் என கறார் காட்டுகிறார் அகிலேஷ் யாதவ்.
conflict between the Samajwadi Party and the Congress has intensified over seat-sharing
conflict between the Samajwadi Party and the Congress has intensified over seat-sharingsource:thamizhalai,ai generated
3 min read

உத்தர பிரதேசம் 403 தொகுதிகள்

இந்தியாவில் பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். 403 சட்டசபை இடங்களை கொண்ட இந்த மாநிலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தலை எதிர்கொள்ளும் அப்படின்னு தெரியுது.

மூன்றாவது முறையும் அரியணை - பாஜக தீவிரம்

இங்கு 2017ம் ஆண்டுமுதல் பாஜக ஆட்சி பொறுப்பில் இருந்து வருது. முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத், 3வது முறையும் பாஜகவை அரியணை ஏற்ற முழு வீச்சில் களமிறங்கி செயல்பட்டு வர்றாரு.

காங்கிரஸ் நிலைமை பரிதாபம்

தேசிய கட்சியான காங்கிரசை பொருத்தவரை உத்தரபிரதேசத்தில் எங்கே இருக்கு அப்படின்னு தேட வேண்டிய நிலையில் தான் இருக்கு. ஒரு காலத்தில காங்கிரசின் கோட்டையா இருந்தது இந்த மாநிலம் தான்.

2 எம்எல்ஏக்கள் தான்

2017 சட்டசபை தேர்தல், 2022 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள் அப்படின்னு பார்த்தா வெறும் 7 மற்றும் 2 இடங்கள் தான்.

நிலைம இப்படி இருக்கையில், சமாஜ்வாதியோட கைகோர்த்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருக்கு. ஆனா, சிக்கல் என்னன்னா, காங்கிரஸ் 45 சதவீத தொகுதிகள கேட்குது.

181 இடங்களை எதிர்பார்க்கும் காங்கிரஸ்

அப்படின்னா 150க்கும் அதிகமான தொகுதிகள் காங்கிரசோட எதிர்பார்ப்பா இருக்கு. இரண்டு தேர்தல்களில் இரட்டை இலக்க தொகுதிகள கூட வெல்ல முடியாத காங்கிரஸ், இப்போ இந்த அளவுக்கு டிமாண்ட் வைக்கிறது, விநோதமான பேரமா இருக்கு.

பாஜகவை வீழ்த்தணும் அப்படிங்கிறது சமாஜ்வாதி, காங்கிரசோட லட்சியமா இருந்தாலும், இந்த அளவு சீட் கேட்பது ஓவர் அப்படின்னு நினைக்கிறாரு அகிலேஷ்.

இப்படி சீட் கேட்கிற உரிமை காங்கிரசுக்கு இருக்கா? அப்படியே சீட் கிடைச்சாலும் வெற்றி என்பது எந்த அளவு சாத்தியம் அப்படிங்கிறது தான் உத்தர பிரதேச அரசியல்ல இப்போ பேச்சா இருக்கு.

லோக்சபா தேர்தல் - 6ல் காங்கிரஸ் வெற்றி

சரி சமாஜ்வாதி கட்சியோட ஸ்டிரைக் ரேட் எப்படி இருக்குன்னு பார்த்தா 2024 லோக்சபா தேர்தலில் அகிலேஷ் வகுத்த வியூகம் தான் வெற்றியை ஈட்டி தந்தது. அதன் காரணமாக தான் 6 சீட்களை காங்கிரஸ் வெல்ல முடிஞ்சது.

வெறும் 2.33 சதவீத வாக்குகள், 2 எம்எல்ஏக்களை மட்டுமே வச்சி இருக்கிற காங்கிரஸ், சமாஜ்வாதியின் தொகுதிகளையும் கேட்பது, அபரிதமான ஆசை அப்படின்னு அகிலேஷ் ஆதரவாளர்கள் முணுமுணுக்கிறாங்க.

2022ல் காங்கிரஸ் படுதோல்வி

கடந்த தேர்தலில் 380 இடங்களில் டெபாசிட் இழந்து படுதோல்விய சந்திச்ச காங்கிரஸ், இன்னிக்கு வர அதில் இருந்து பாடம் கத்துக்கல. 2017ல பார்த்தீங்கன்னா, சமாஜ்வாதி கூட்டணியில 114 இடங்களை பெற்ற காங்கிரஸ், அதுல 107 தொகுதிகளில பாஜகவின் வெற்றிக்கு தாரை வார்த்ததை அகிலேஷ் இன்னும் மறக்கல.

கூட்டணியை முறிக்கிறா காங்கிரஸ்

எந்த மாநிலமா இருந்தாலும் ‘பெரிய அண்ணன்’ மனநிலையில் எப்போதுமே செயல்படும் காங்கிரஸ் கட்சி, கூட்டணிப் பேச்சு வார்த்தையின் தொடக்கத்திலேயே 181 இடங்கள் அப்படின்னு எகிற அடிக்கிறது, கூட்டணியை முறிக்க நினைக்கிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கு.

37 ஆண்டுகளில் தேய்ந்து போன காங்கிரஸ்

1989ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் 37 ஆண்டுகளா, கொஞ்சம் கொஞ்சமே தேய்ந்து கிட்டே வருது. தனிச்சு வெற்றி பெறும் அளவுக்கு பலம் இருக்கிறதா காங்கிரஸ் நினைக்குது, ஆனா, கள நிலவரம் கலவரமா இருக்கு.

கைவிட்டு போன வாக்குகள்

1980களில காங்கிரசின் பலமா இருந்த உயர் சாதியினர், தலித்துகள், இஸ்லாமியர்கள் இப்போ அவங்க பக்கம் இல்ல. பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆசாத் கட்சி அப்படின்னு பிரிஞ்சிட்டாங்க.

முலாயம் சிங்கின் இடஒதுக்கீடு அரசியல், பாஜகவின் இந்துத்துவா அரசியலுக்கு இடையே, காங்கிரசின் கொள்கை என்பது வெறும் கோஷமாவே நின்னு போச்சு.

தொண்டர்களே இல்லாத காங்கிரஸ்

இந்தியாவின் பெரிய மாநிலமா இருக்கிற உத்தர பிரதேசத்தில கிட்டத்தட்ட 60 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. எல்லா கிராமங்களிலும் பூத் கமிட்டியை நிர்வகிக்கிற அளவுக்கு கூட காங்கிரசிடம் பலம் இல்லை.

அனைத்துச் சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் வலுவான மாநிலத் தலைவர் இல்லாதது காங்கிரசோட பலவீனம்.

181 தொகுதிகள் - வெற்றி சாத்தியமா?

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பின் தங்கி இருக்கிற காங்கிரஸ் கூட்டணியில 181 இடங்கள கேட்குது. லோக்சபா தேர்தலில் 6 தொகுதிகளில் பெற்ற வெற்றியை வச்சு காங்கிரஸ் கணக்கு போடுது. அப்படி பார்த்தா கூட 40 தொகுதிகளில் தான் காங்கிரஸ் வெற்றி பெற முடியும், 180 தோகுதிகள கேட்பது ரொம்ப ஓவர்தான் அப்படிங்கிறது சமாஜ்வாதியோட நிலைப்பாடா இருக்கு.

25 இடங்கள் தான் அகிலேஷ் கறார்

எனவே, 181 இடங்கள் எல்லாம் தரமுடியாது, முதற்கட்டமாக 25 தொகுதிகள், பேச்சுவார்த்தை அடிப்படையில அதிகபட்சமா 50 தொகுதிகள் தான் தர முடியும் அப்படின்னு கறார் காட்டுறாரு அகிலேஷ்.

சவாலாக மாறிய 3வது கூட்டணி

இந்தநிலையில், புதிய சவாலா, சந்திரசேகர் ஆசாத் - ஒவைசி கூட்டணி களத்தில குதிச்சு இருக்கு. 3வது அணியா இவங்க களமிறங்கினா, தலித், இஸ்லாமியர் வாக்குகள் பிரியும். இது சமாஜ்வாதி கட்சிக்கு பலத்த அடியா இருக்கும்.

யாதவ், இஸ்லாமியர் வாக்குகள் சமாஜ்வாதியோட பலம். இந்த வாக்குகள் பிரிஞ்சா அது பாஜகவுக்கு தான் லாபமா முடியும். எனவே, காங்கிரசுக்கு சீட் கொடுக்கிற விவகாரத்தில பின் வாங்குறாரு அகிலேஷ்.

காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படின்னு நினைக்கிறதல தப்பே இல்லை. ஆனா, அதற்கான விலையை சமாஜ்வாதி கொடுக்கணும்ன்னு நினைக்கிறது பேராசை.

பாஜகவை வீழ்த்த அனுசரிப்பு அவசியம்

பாஜகவை வீழ்த்துவதுதான் இண்டியா கூட்டணியின் இலக்குன்னா, அப்போ தொகுதி பங்கீட்டில் வெற்றி வாய்ப்பை அளவு கோலா வச்சு, அனுசரிச்சு போனா மட்டும் தான், உத்தர பிரதேசத்துல அகிலேஷ் ஆட்சி அமைக்க ஓரு வாய்ப்பாவது கிடைக்கும்.

தொண்டர்களே இல்லாம 181 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது தற்கொலைக்கு சமம். மூன்றாவது முறையா பாஜக ஆட்சி அமைக்கிறத யாரும் தடுக்க முடியாது.

காங்கிரசின் பிடிவாதம், பாஜகவுக்கு பிளஸ்

எதிர்க்கட்சிகள் முகாம்களில் ஏற்படும் ஒவ்வொரு சலசலப்பும் பாஜகவுக்கு சாதகமாகத்தான் முடியும். கூட்டணி முக்கியம், வெற்றி அவசியம், 2029 மத்தியில ஆட்சிய பிடிக்கணும் அப்படின்னா சரியா வியூகம் தேவை.

இதையெல்லாம் ராகுல் சிந்திச்சு சரியான முடிவை எடுத்தா மட்டுமே, உத்தர பிரதேசத்தில சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி சாத்தியம், இல்லைன்னா, படுதோல்வியை விலைகொடுத்து வாங்குவதை தவிர வேறு வழியே இல்லை.

==================