

புதுச்சேரியில் வித்தியாசமான அரசியல்
DMK or Congress Who Leads INDIA Alliance in Puducherry? : தமிழகத்தை ஒட்டி இருக்கும், தமிழ் பேசும் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி, நமது அரசியலை விட வித்தியாசமானது. தமிழகத்தில் திமுக, அதிமுக பிரதான கட்சிகள். ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் பிரதான கட்சி. அதிலிருந்து பிரிந்த என்ஆர் காங்கிரஸ் தான் அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.
2ம் இடத்தில் திராவிட கட்சிகள்
புதுச்சேரி அரசியலை பொருத்துவரை திமுக, அதிமுக இரண்டாம் பட்சம் தான். அங்கு ஒன்று காங்கிரஸ் அரசு அல்லது என்ஆர் காங்கிரஸ் அரசு தான்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தை போலவே புதுச்சேரிக்கும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும். ஒரே நாளில் கூட இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருக்கிறது.
19 தொகுதிகள் திமுக முனைப்பு
30 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தில் இந்த முறை 19 தொகுதிகள் வரை போட்டியிட திமுக திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம், இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்கவும் அந்தக் கட்சி உறுதியாக இருக்கிறது.
கைவிடப்படும் காங்கிரஸ்
அப்படி என்றால் காங்கிரசுக்கு 6 முதல் 8 தொகுதிகள் வரை தான் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும். எதிர்காலத்தில் புதுச்சேரியில் ஆட்சி பிடிப்பது என்பதே காங்கிரசுக்கு பகல் கனவாகி விடும்.
ஆட்சியை பிடிக்க திமுக வியூகம்
தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் திமுக, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு முழு ஆதரவு தந்து இருக்கிறது. எனவே, சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையில் ஆட்சி அமைக்க திமுக விரும்புகிறது.
தனித்து போட்டியிடவும் திமுக ஆலோசனை
சில தினங்களுக்கு முன்பு நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சிவா, “இனியும் ஓடாத வண்டியில் ஏறி பயணம் செய்ய திமுக தயாராக இல்லை. 2026 தேர்தலில் திமுக 19 தொகுதிகளை கேட்டுப் பெறும். தனித்து என்றால் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” என்று பேசியது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரியை பொருத்தவரை ஏற்கனவே நான்கு முறை திமுக ஆட்சியில் இருந்து இருக்கிறது. எனவே கட்சி வலுவாக உள்ளது. தமிழகத்தை போலவே நலத்திட்டங்களை செயல்படுத்தினால், ஆட்சியை பிடிப்பது எளிது என்று திமுக கருதுகிறது.
மாற்றத்தை விரும்பும் மக்கள்
புதுச்சேரி மக்களும் மாற்றதை எதிர் நோக்குவதால், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள திமுக விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி முன்போல பலம் வாய்ந்த ஒன்றாக இல்லை. இதைத்தான் திமுக மறைமுகமாக ஓடாத வண்டி என்று விமர்சிக்கிறது.
திமுக தலைமேயேற்குமா?
இண்டியா கூட்டணியில் இருக்கும் திமுக தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. அதேபோல் புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்குமா அல்லது திமுக தலைமை தாங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கூட்டணி கணக்கு மாறுகிறதா?
புதுச்சேரியை காங்கிரஸ் விட்டுக் கொடுக்குமா என்பதும் சந்தேகம் தான். புதுச்சேரியை ஆளும் என்ஆர் காங்கிரஸ், முதல்வர் ரங்கசாமியை திமுக விமர்சிப்பது கிடையாது. எனவே, கூட்டணியில் மாற்றம் வருமோ என்ற ஐயமும் எழுந்துள்ளது.
மாணிக்கம் தாகூர் கேள்வி
திமுகவின் திடீர் பிடிவாதம், இண்டியா கூட்டணி கூட்டத்திற்கு அழைக்காமல் புறக்கணிப்பது காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த புதுச்சேரி நிர்வாகிகள் வாயை மூடி மவுனமாக இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்த அக்கட்சி எம்பியான மாணிக்கம் தாகூர்,
யாருக்கு அதிக செல்வாக்கு?
கூட்டணியில் 8 % வாக்கு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா அல்லது, 26% உள்ள கட்சித் தலைமை தாங்குமா? என்ற கேள்வியை முன்வைத்து இருக்கிறார். ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இழிவாக பேச வேண்டும்?
தொடரும் இந்த முறை நல்லது இல்லை, என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனவே, புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்க போவது திமுகவா? அல்லது காங்கிரசா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
===============