

ஆந்திர மாநிலம்
தென்னிந்தியாவில் முக்கியமான மாநிலங்களில் ஒன்று ஆந்திர பிரதேசம். ஒரு கால கட்டத்தில காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக ஆந்திரா இருந்துச்சு. 1982ம் ஆண்டு என்.டி. ராமாராவ், தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கி, ஆட்சியை பிடிச்சாரு.
காங்கிரஸ் vs தெலுங்கு தேசம்
அதன்பிறகு, காங்கிரஸ், தெலுங்கு தேசம் மாறி மாறி ஆட்சி செஞ்சாங்க. ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்துச்சு. 2014ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா உதயமானது.
காங்கிரசின் சரிவு
தலைநகரா இருந்த ஐதராபாத் தெலங்கானா வசமாச்சு. மாநில பிரிவினைக்கு பிறகு, ஆந்திராவில் காங்கிரசில் சறுக்கல் தொடங்கிச்சு.
முன்னாள் முதல்வர் ஒய்எஸ். ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பிச்சு 2019ல ஆட்சிய பிடிச்சாரு. அவர் காலத்திலும் காங்கிரசால் தலைநிமிர்ந்த நிலை தான் இருந்துச்சு.
2009ம் ஆண்டு, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 42 மக்களவை உறுப்பினர்களில் 33 பேர் காங்கிரசை சேர்ந்தவர்களாக இருந்தாங்க.
எம்பி, எம்எல்ஏ இல்லாத காங்கிரஸ்
அதன்பிறகு ஆந்திர பிரதேசம் 2 மாநிலங்களா பிரிக்கப்பட்ட பிறகு, காங்கிரசோட வீழ்ச்சி என்பது தொடங்கிச்சு. அந்த வகையில், படிப்படியா செல்வாக்கை இழந்த காங்கிரசுக்கு இப்போ ஆந்திராவில் இருந்து ஒரு எம்பி கூட இல்லை.
ஆமா, 25 லோக்சபா இடங்களில ஒன்றில் கூட அந்தக் கட்சியால் 2024ல வெற்றி பெற முடியல. சரி ராஜ்யசபா பக்கம் பார்த்தோம் அப்படின்னா, 11 இடங்களில ஒன்னு கூட காங்கிரஸ் வசம் இல்லை.
சரி அது போகட்டும், சட்டசபை நிலை எப்படி இருக்குன்னா, 175 தொகுதிகளிலும் காங்கிரஸ் எண்ணிக்கை அப்படிங்கிறது வெறும் பூஜ்யம் தான். 2024 சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் - ஜன்சேனா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற, சந்திரபாபு நாயுடு முதல்வரா இருக்காரு.
வாக்கு சதவீதம் 1.74
2024 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 158 தொகுதிகளில் போட்டியிட்டு 1.74% வாக்குகளை மட்டுமே பெற்றது.
மாநில பிரிவினை, தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் ஜனசேனா ஆகிய மாநிலக் கட்சிகளிடையே வாக்குகள் முழுமையாகப் பிரிந்ததால் காங்கிரஸால் வாக்கு வங்கியைத் தக்கவைக்க முடியவில்லை.
செல்வாக்கு இழந்த காங்கிரஸ்
முக்கிய தலைவர்கள் கட்சியின் இருந்து பிரிந்து சென்றது, தேசிய தலைமை எடுத்த தவறான முடிவுகள், ஆந்திராவில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட முக்கிய காரணம்.
இவ்வளவு தோல்விக்கு பிறகும் காங்கிரஸ் கட்சி எந்தப் பாடமும் கத்துக்கல என்பது உள்ளாட்சி தேர்தலில் அம்பலமாகி இருக்கு. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியோட சகோதரி ஷர்மிளா தான், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரா இருக்காரு.
பொதுமக்களால் நன்கு அறியப்பட்ட அவர் தலைமையில் தான் உள்ளாட்சி தேர்தல காங்கிரஸ் சந்திச்சு. இந்ததேர்தலில் ஒரே ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாம காங்கிரஸ் கட்சியானது படுதோல்வியை சந்திச்சு இருக்கு.
ஒரு கவுன்சிலர் கூட இல்லை
ஆதாவது மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கலையா அப்படின்னு பார்த்தா, ஒரு கவுன்சிலர் பதவி கூட கிடைக்காதது பேரதிர்ச்சி தான்.
காங்கிரசே இல்லாத ஆந்திரா
அந்த வகையில பார்த்தா, இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதித்துவம் முற்றிலும் இல்லாத முதல் மாநிலமாக ஆந்திரா உருவாகி இருக்கு. இதன் மூலமா தோல்வியிலும் வரலாறு படைச்சு இருக்கு காங்கிரஸ் கட்சி.
எம்பியில் தொடங்கி, பஞ்சாயத்து உறுப்பினர் வரை ஒருத்தர் கூட இல்லாம ஆந்திராவில் தூக்கி எறியப்பட்டு இருக்கிறது காங்கிரஸ்.
தொடர் தோல்விகள் ஆராயுமா காங்கிரஸ்
தோல்விகளில் இருந்து பாடம் கத்துக்கிற கட்சிகளை பார்த்து இருக்கிறோம். ஆனா, தொடர் தோல்விகளை சந்திச்சும், காங்கிரஸ் ஏன் அதை ஆராயாம இருக்கிறது என்பது தான் ஆச்சரியம்.
தென்னிந்தியாவ பொருத்தவரை தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில இருக்கு. தமிழ்நாட்டுல கூட்டணி ஆட்சிய அங்கம் வகிக்குது.
சுயபரிசோதனை மிகவும் அவசியம்
அப்படி இருக்கையில், ஆந்திராவில் மட்டும் இந்த அளவு தோல்விக்கு காரணம் என்ன? அதளபாதாளத்தில் இருக்கிற கட்சியை எப்படி மீட்டு மேலுக்கு கொண்டு வருவது என்பது பத்தி, முழுமையா சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்துல ஆந்திரா காங்கிரஸ் தலைமையும், கட்சியோட தேசிய தலைமையும் இருக்கிறது என்பது தான் நிதர்சனமாக உண்மை.
==============