காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் தொடர இழுபறி: புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வேட்பு மனுத் தாக்கல்!

Puducherry Assembly Election 2026 : புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தொடங்கி உள்ளனர்
Congress talks continue to drag on: DMK files nominations in all 30 constituencies in Puducherry Assembly Election 2026
Congress talks continue to drag on: DMK files nominations in all 30 constituencies in Puducherry Assembly Election 2026google
1 min read

சட்டமன்ற தேர்தல்

Puducherry Assembly Election 2026 : புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 9-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது .அதன்படி அங்கு வேட்பு தாக்கல் அங்கு விறுவிறுப்பாக நடந்து வருகிறது .தற்போது நடைபெற்று வரும் வேட்பு மனுத் தாக்கல் வருகிற மார்ச் 23-ந் தேதி முடிவடைகிறது.

கூட்டணியில் இழுபறி

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ், பாஜக- என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையாமல் இழுபறியில் நீடித்து வருகிறது ,

இந்த நிலையில் புதுச்சேரியில் புதியதாக தொடங்கப்பட்ட லாட்டரி மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயகக் கட்சியை பாஜக கூட்டணியில் இணைக்க கூடாது என என்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

30 தொகுதிகளிலும் திமுக வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனுத் தாக்கல் கால அவகாசமும் இன்னும் சில நாட்களில் முடிவடைய இருப்பதால் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை வேட்பு மனுத் தாக்கல் செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

மேலும் படிக்க : Puducherry Alliance : ”NDAக்கு குட்பை, TVKவுக்கு வெல்கம்” : புது ரூட்டில் ரங்கசாமி, களேபரத்தில் புதுச்சேரி!

அதனடிப்படையில் முதலியார்பேட்டை தொகுதியில் திமுகவின் சார்பில் சம்பத் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் கட்சிகளுக்கான தொகுதிகளின் அடிப்படையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவோம் என்றும் திமுக தலைமை தெரிவித்துள்ளது.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in