

ஜிஎஸ்டி வசூல் - வரலாற்று உச்சம்
India's gross Goods and Services Tax (GST) collections reached an all-time high of ₹2.43 lakh crore in April 2026, marking an 8.7% year-on-year growth : சரக்கு மற்றும் சேவை வரியில் நாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சம் தொட்டு, ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டி விட 8.7% உயர்வு
கடந்த 2025 ஏப்ரலில் வசூலான ரூ.2.23 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் வசூல் 8.7% அதிகரிப்பு. இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி உயர்ந்ததே, வசூல் அதிகரிப்பிற்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
வசூல் 2.43 லட்சம் கோடி
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சம் தொட்டு, ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்ந்து சாதித்து இருக்கிறது.
வலிமையான இந்திய பொருளாதாரம்
உலக அளவில் பொருளாதாரச் சவால்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற சிக்கல்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலிமையாக இருப்பதை இந்த வளர்ச்சி காட்டுகிறது.
அதிகளவில் பொருட்கள் விற்பனை
குறிப்பாக, மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்குவதால் உள்நாட்டு வரி வசூல் ரூ. 1.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுடன், வெளிநாட்டு இறக்குமதி மூலமான வரி வசூலும் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அரசின் வருமானம் நிலையாக உள்ளது
தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரீபண்ட் தொகையாக ரூ. 31,793 கோடியை அரசு திருப்பி அளித்த பிறகும், அரசின் நிகர வருமானம் ரூ. 2.10 லட்சம் கோடியாக நிலைபெற்றுள்ளது.
வாங்கும் திறன் அதிகரிப்பு
இந்தியர்களின் வாங்கும் திறன் அதிகரித்து, வர்த்தகம் சுறுசுறுப்பாக இருப்பதே அதிக அளவில் வசூலாக முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
===