”தீவிர புயலாக ஆந்திராவில் கரையை கடக்கும் ‘அக்வான்’ : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை மிக கனமழை எச்சரிக்கை..!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள அக்வான் தீவிர புயலாக வலுப்பெற்று, 20ம் தேதி ஆந்திராவில் கரையை கடக்கிறது.
Cyclone 'Akwan', is intensifying into  severe cyclonic storm, cross coast in Andhra Pradesh on 20th
Cyclone 'Akwan', is intensifying into severe cyclonic storm, cross coast in Andhra Pradesh on 20thsource:thamizhalai,ai generated
1 min read

தீவிர புயலாக ’அக்வான்’

வங்​கக்​கடலில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் நேற்று ‘அக்​வான்’ புய​லாக மாறியது. இது மிகத் தீவிர புய​லாக இன்று மாலை வலுப்பெறுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ​

மத்திய மேற்கு வங்கக் கடலில் நீடிக்கிறது

இது​தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: வங்​கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் வடக்கு, வடமேற்கே நகர்ந்து நேற்று ‘அக்​வான்’ (Akvan) புய​லாக வலுப்பெற்​றது. இது மேலும் வலுப்​பெற்று மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகுதி​யில் இன்று மாலை தீவிர புய​லாக நில​வக்​கூடும்.

20ம் தேதி கரையை கடக்கிறது

இது மேலும் வலு​வடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.20-ம் தேதி நண்​பகல் மிகத் தீவிரப் புய​லாக நெல்​லூர் - துனி இடையே ஆந்திரகடற்​கரையை கடக்க வாய்ப்புள்​ளது. அப்​போது மணிக்கு 120-130 கி.மீ. வேகத்​திலும், இடை​யிடையே 145 கிமீ வேகத்​திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும்.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

இதன் காரண​மாக, இன்று தமிழகத்​தின் மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்கால் பகுதி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை

18, 19-ம் தேதி​களில் சென்னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் (40-50 கிமீ வேகம்) மிக கனமழையும் காஞ்​சி, ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் கனமழையும் பெய்​யக்​கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மற்ற பகுதி​களில் லேசான மழையும் பெய்​யக்​கூடும். வட கடலோரப் பகுதி​களில் இன்றும், நாளை​யும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே அங்கு மீனவர்​கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

====