முழுமையாக கடந்தது ‘அர்னாப் புயல்’ : 135 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று, கொட்டித் தீர்த்த மழை, வெள்ளம், பலத்த சேதம்..!

ஆந்திராவில் முழுமையாகக் கரையை கடந்த அர்னாப் புயல், மழையை கொட்டித் தீர்த்ததோடு, பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Cyclone Arnab, made full landfall in Andhra Pradesh, unleashed heavy rainfall extensive damage.
Cyclone Arnab, made full landfall in Andhra Pradesh, unleashed heavy rainfall extensive damage.source:thamizhalai,ai generated
1 min read

அதிதீவிர அர்னாப் புயல்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரம் அடைந்து, அதி தீவிர புயலாக உருவானது. இதற்கு ‘அர்னாப்’ என பெயர் சூட்டப்பட்டது. வட கடலோரம் நகர்ந்து, சென்னையை அருகே கரையை கடக்குமோ என்ற அச்சம் நிலவிய நிலையில், தனது பாதையை மாற்றிய அர்னாப், ஆந்திராவை நோக்கி சென்றது.

முழுமையாக கரையை கடந்தது

நர்சாபூர் - காக்கிநாடா இடையே யானம் பகுதியில் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கிய புயலானது, இடையில் சுமார் 3 மணிநேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டு மிரட்டியது. பின்னர் படிப்படியாக கரையை கடந்தது.

135 கி.மீ. வேகத்தில் காற்று

புயல் கரையை கடந்த போது மணிக்கு 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 150 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசியது.

அதிதீவிரப் புயலாக இருந்த அர்னாப் கரையை கடந்த பிறகு புயல் சற்று வலுவிழந்து, தீவிரப் புயலாக மாறி வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் கொட்டித் தீர்த்த மழை

இதனிடையே ஆந்திரா, ஏனாம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அர்னாப் புயலால் கனமழை கொட்டி தீர்த்தது. காக்கிநாடாவில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன.

விமான, ரயில் சேவை பாதிப்பு

மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா இடையேயான விமான மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டதால் எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன, 85 ஆயிரம் பேர் நிவார முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in