
தீபங்களின் வரிசை தீபாவளி :
Diwali Festival 2025 Celebrations in Tamil : தீபாவளி (Diwali) என்ற சொல் தமிழில் இருந்து வந்தது இல்லை. தீபாவளி என்பது சமஸ்கிருத சொல் எனக் கூறப்படுகிறது. மேலும், தீபாவளி என்பதற்கு தமிழில் ‛விளக்குகளின் வரிசை' என்று பொருள்படும். இருளை நீக்கி ஒளி தருவது, தீமை அழிந்து நன்மை பிறப்பது, அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பது உள்ளிட்டவற்றையும் தீபாவளி குறிக்கிறது.
இந்து, சமணம், சீக்கியர் விழா
நம் நாட்டில் தீபாவளி என்பது இந்து, சமண, சீக்கியர்களின் முக்கியப் பண்டிகையாக உள்ளது. அதேபோல், மற்றவர்களும் கலாசார ரீதியாக தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர். தீபாவளியை முதன் முதலாகக் கொண்டாடியவர் நரகாசுரனின் மகனான பகதத்தன்.
இந்தியாவில் தீபாவளி ஒரு பண்டிகையாக கி.பி. 15ம் நூற்றாண்டிலிருந்து முறைப்படி(Diwali History in Tamil) கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி - தீபாவளி தொடர்பு
இலங்கையில் நடைபெற்ற போரில் விஜயதசமி அன்று ராவணனைக் கொன்று சீதையுடன் அயோத்திக்கு திரும்ப ராம - லட்சுமணருக்கு 21 நாட்கள் ஆனது. ராமர், சீதை, லட்சுமணன் அயோத்திக்கு திரும்பும் நாளில், அவர்களை வரவேற்க அயோத்தி முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விஜயதசமிக்கு சரியாக 21 நாட்களுக்கு பிறகு தீபாவளி கொண்டாடப்படுவதன்(Deepawali Celebration Reason in Tamil) காரணம் இதுதான்.
தென்னிந்தியாவில் தீபாவளி திருவிழா
கி.பி. 1117ம் ஆண்டு திருபுவன சாளுக்கிய மன்னன் ‘சாத்யாயர்’என்ற தீபாவளி நாளில் பரிசுகளை வழங்கி, மக்களை உற்சாகப்படுத்தினார். இதுதான் தென் இந்தியாவில் தீபாவளி பற்றிய முதல் குறிப்பு. அதன்பிறகு தான் தென்னிந்தியாவில் தீபாவளி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி எத்தனை நாட்கள் கொண்டாடலாம்
வட மாநிலங்களில் தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆனால், குஜராத்தில் தீபாவளி பண்டிகை 20 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. தீபாவளி சமயத்தில் இனிப்பு சாப்பிடுவது விசேஷமானது. சிறிது உப்பையும் சேர்த்து சாப்பிடுவார்கள். எனவே, இந்நாளில் உப்பு விற்பனை அதிகமாக இருக்கும். குஜராத்தில் பகவான் கிருஷ்ணர் பூலோக வாழ்வை நீத்து, வைகுண்டம் சென்ற நாளாக கொண்டாடப்படுகிறது.
எப்படி எல்லாம் தீபாவளி கொண்டாட்டம்
ஆந்திரா மாநிலத்தில் காலை நேரத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் கிடையாது. பகலில் விருந்துண்டு, இரவில் தீபமேற்றி வீட்டை அலங்கரிப்பர்.
கர்நாடகாவில் ‘திவா’ எனும் அகல் மண் விளக்குகளை விதவிதமாக வாங்கி வீட்டில் ஏற்றுவதை கொண்டாடுவர்.
கர்நாடக மாநிலம், ஹாசன் எனும் ஊரில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பிகை கோயில் அமைந்து இருக்கிறது.
ராஜஸ்தானில் தீபாவளி அன்று பூனைகளுக்கு வழிபாடும் படையலும் உண்டு. அவர்கள் பூனையை மகாலட்சுமி வடிவத்தில் பார்க்கிறார்கள். . தீபாவளியுடன் ஆண்டு முடிந்து, மறுநாள் அடுத்த ஆண்டு ஆரம்பித்து விடும்.
மத்திய பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் தீபாவளிக்கு மறுநாள் கோவர்தன பூஜை நடைபெறும். அப்போது காளை மாடுகளை மோதவிட்டு விளையாடி மகிழ்வார்கள்.
பீகாரில் தீபாவளி அன்று ஆண்கள் கூடை நிறைய நெற்கதிர்களும், புல்லும் எடுத்துக் கொண்டு கிராமத்தை வலம் வருவார்கள்.
மகாராஷ்டிராவில் தீபாவளி அன்று கடற்கரை பகுதிகளில் சிறு சிறு மணல் கோட்டைகள் கட்டி கொண்டாடுகிறார்கள். "ராட்டிய மன்னர் வீர சிவாஜி தீபாவளி அன்று தனது எதிரிகளின் கோட்டைகளை கைப்பற்றியதன் நினைவாக இப்படி கொண்டாடப்படுகிறது.
11ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த டோமிஸ் கேபேயஸ் என்ற போர்ச்சுகீசிய பயணி தீபாவளி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
சிங்கப்பூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீபாவளியன்று பூக்குழி திருவிழா நடைபெறும்.
இமயமலையில் உள்ள கங்கோத்திரியில் புராதான கங்கா தேவி கோயில் உள்ளது. இங்கு தீபாவளியன்று தீபங்கள் ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளியன்று பழைய ரூபாய் நோட்டுகளை தம் வீட்டு பெரியவர்களிடம் கொடுத்துவிட்டு, புது ரூபாய் நோட்டுகளை அவர்களின் ஆசிகளுடன் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் வீடுகளை அலங்கரித்து தீபாவளி அன்று மாலையில் தீபங்களால் அழகுபடுத்துவார்கள். அன்று 14 வகை கீரைகளை சமைத்து சாப்பிடுவார்கள்.
கர்நாடக மாநிலத்தில் தீபாவளிக்கு முதல் நாளில் நீர் நிரப்பும் விழா கொண்டாடுகிறார்கள். குளியல் அறையை கழுவி சுத்தம் செய்து கோலம் போட்டு வெந்நீர் அண்டாக்களை அலங்கரித்து நீர் நிரப்பி பூஜை செய்வார்கள்.
பாகவத புராணத்தில் இப்பண்டிகை ‘தீபாவளிகா’ என்றும், கால விவேகத்தில் ‘சுக்ராத்திரி, வடமொழி நூல்களில், ‘திருத்யத்வம்’ , என்று அழைக்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியன்று மாலை ‘அத்தரதானம்’ எனும் வழிபாடு நடைபெறும். முதலில் மலையப்ப சுவாமி தங்கப்பல்லத்தில் உட்பிராகாரத்தைச் சுற்றி வலம் வருவார். பிறகு கருடாழ்வாருக்கு எதிரில் இறக்கி வைக்கப்பட்டு, ‘விருட்சபாடி’ எனும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மூலவருக்கு புதுப் பட்டு வஸ்திரங்கள் பரிசாக வழங்கப்படும்.
* திருச்செந்தூர் முருகனுக்கு இந்திரன் தனது மகள் தெய்வயானையை திருமணம் செய்து கொடுத்தார். அதனால் இந்திரன் தனது மருமகனுக்கு தீபாவளி புத்தாடை சீர் செய்வதாக ஐதீகம். அதனால் முருகன் அன்று புத்தாடை அணிவது வழக்கம்.
வெனிசுலா நாட்டில் ட்ரினிடேட் எனும் ஊரில் தீபாவளி நகர் என்ற ஒரு பகுதி உள்ளது. இங்கு தீபாவளி அன்று பூஜைகளும் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
நேபாளத்தில் தீபாவளி, திஹார் (Tihar) என்று அழைக்கப்படுகிறது. இது 5 நாள் பண்டிகை ஆகும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விலங்குகள் மற்றும் கடவுள்களை வழிபடுகின்றனர்.
இலங்கையில் தீபாவளியை சீதை விடுதலை பெற்ற நாளாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு மகாலட்சுமி பூஜை செய்கிறார்கள்.
விக்கிரமாதித்தன் தீபாவளிக்கு மறுநாள்தான் தனது விக்ரம சகாப்தம் தொடங்கினான்.
தீபாவளி - சிறப்பு அஞ்சல் தலைகள்
முதன் முதலாக அமெரிக்கா அங்கு வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்காக 2016ல் தீபாவளி சிறப்பு தபால் தலையை வெளியிட்டது. தங்க நிறத்தில் ஒரு விளக்கு எரிவதைப் போன்ற படத்துடன் அந்த தபால் தலை இருந்தது.
மேலும் படிக்க : தீபாவளிக்கு 26 லட்சம் விளக்குகள்: சாதனைக்கு தயாராகும் அயோத்தி
தீபாவளி பண்டிகைக்காக 2018ம் ஆண்டு ஐ.நா சபையின் தபால் நிர்வாகம் சார்பில் முதன் முதலாக தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த தபால் தலையில் ‘ஹேப்பி தீபாவளி’ என்ற வாசகம் இடம்பெற்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2021ம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பிரிட்டன் அரசு வெளியிட்டது. நாணயத்தின் ஒருபுறம் மகாத்மா காந்தி பொன் மொழியும், மறுபுறம் தேசிய மலராக தாமரையும் இடம் பெற்றது.
==============