
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்” என்றார்.
மற்ற நாடுகளும் இத்தகைய பயங்கரவாத செயல்களை கண்டிக்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியே ஆபரேஷன் சிந்தூர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் கூடாது என்பதே இந்தியாவில் நிலைப்பாடு.
சில நாடுகள் அரசுக் கொள்கையாகவே இப்படிப்பட்ட செயல்களை செய்கின்றன, பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக திகழ்ந்தால் என்ன நேரும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் காட்டி இருக்கிறோம்.
இனியும் அத்தகைய இலக்குகளை குறிவைக்க இந்தியா தயங்காது.
பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடம் கொடுக்கக் கூடாது, என்றும் ராஜ்நாத் சிங் ஆவேசத்துடன் பேசினார்.
====