”2.50 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ.11,000 கோடி இழப்பு” : இண்டியா கூட்டணி போராட்டத்தால் வணிகர்களுக்கு கடும் பாதிப்பு..!

டெல்லியில், இந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.50 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகர்களுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Delhi 2.50 lakh shops closed due to protest by INDIA alliance, a loss of Rs 11,000 crore for traders
Delhi 2.50 lakh shops closed due to protest by INDIA alliance, a loss of Rs 11,000 crore for traderssource:thamizhalai,ai generated
2 min read

இந்தியா கூட்டணி போராட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென இண்டியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை முன்வைத்து அந்தக் கூட்டணி டெல்லியில் தொடர் பேரணிகள், போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல், போக்குவரத்து பாதிப்பு என தலைநகரம் பிரச்சினைகள் எதிர்கொண்டு வருகிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பிரம்மாண்ட பேரணி, பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இண்டியா கூட்டணிக்கு வர்த்தகர்கள் கோரிக்கை

தீபாவளி பண்டிகைக்கு ஒருவார காலமே இருப்பதால், பேரணி, போராட்டங்களை தள்ளி வைக்குமாறு வர்த்தகர்கள் கோரிக்கு விடுத்து இருந்தனர்.

இண்டியா கூட்டணி பேரணி, பொதுக்கூட்டம்

ஆனால் அதையும் மீறி, இண்டியா கூட்டணி பேரணி நடத்தியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), லிபரேஷன் கட்சி பொதுச் செயலர் தீபாங்கர் பட்டாச்சார்யா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா..

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவர்கள், கார்கே இல்லத்தில் இருந்து திறந்த வாகனங்களில் மின்டோ சாலை - கன்னாட் பிளேஸ் சந்திப்பை சென்றடைந்தனர்.

கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு பேரணியாக சென்றதை அடுத்து ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

2.50 லட்சம் கடைகள் அடைப்பு

இந்தப் போராட்டத்தால் பாதுகாப்பு கருதி 2.50 லட்சத்துக்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டன.

ராம்லீலா மைதானத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் காஷ்மீரி கேட், மோரி கேட், சாந்தினி சௌக், சாவ்ரி பஜார், காரி பாவோலி, நயா பஜார், சதர் பஜார், அஜ்மேரி கேட்...

தர்யாகஞ்ச், கமலாஸ் மார்க்கெட், ஜமாஸ் மார்க்கெட், பஹர்கஞ்ச், லஜ்பத் ராய் மார்க்கெட், கினாரி பஜார், தரிபா கலன், பல்லிமாறன், ஃபதேபுரி, திலக் பஜார், கனாட் பிளேஸ், பாலிகா பஜார், கஃபர் மார்க்கெட் மற்றும் கரோல் பாக் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை விற்பனை ஒரு வாரம் முன்பு, அதாவது விடுமுறை நாட்களிலே அதிகமாக இருக்கும். அப்போதுதான் ஷாப்பிங் செய்ய அனேகம் பேர் கடைகளுக்கு வருவார்கள்.

அந்த நேரத்தில் போராட்டம் நடத்தி வர்த்தகர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது இண்டியா கூட்டணி.

ரூ.11,000 கோடிக்கு வர்த்தகம் இழப்பு

இதனால் சுமார் ரூ.10,000 முதல் 11,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தில்லி வர்த்தகர்கள் வேதனை தெரிவித்தனர்.

===========