

அஜித் பவார் விபத்தில் உயிரிழப்பு
Sunetra Pawar all set to become Maharashtra first woman Ajit Pawar Wife Deputy CM of Maharashtra : மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவார் 28ம் தேதி பாராமதி சென்ற போது விமானம் நொறுங்கி விழுந்ததில் பலியானார். அடுத்த துணை முதல்வர் யார்? தேசியவாத காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவிஸை சந்தித்து, துணை முதல்வர் பதவி பற்றி ஆலோசனை நடத்தினர். என்சிபி மூத்த தலைவர்களான சகன் புஜ்பல், தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல், மாநிலத் தலைவர் சுனில் தட்கரே மற்றும் முன்னாள் அமைச்சர் தனஞ்சய் முண்டே உள்ளிட்டோர் பங்ககேற்றனர்.
துணை முதல்வர் சுனேத்ரா பவார்
அதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் பிரபுல் படேல் அளித்த பேட்டியில்,’கட்சியின் தலைவர் பதவியை நிரப்புவது இப்போது முக்கியமல்ல. அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரையும் துணை முதல்வர் பதவியையும் நிரப்புவதே முக்கியம்.
இதற்காக முதல்வரை சந்தித்து பேசினோம். இந்த பதவிக்கு சுனேத்ரா பவாரை நியமிக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதனை யாரும் எதிர்க்க முடியாது. சுனேத்ரா பவார் பொறுப்பேற்க எந்த எதிர்ப்பும் இல்லை. மக்களின் உணர்வுகளும் கட்சியினர் உணர்வுகளும் ஒன்று தான்.
சட்டமன்ற கட்சித் தலைவர் சுனேத்ரா
சுனேத்ரா பவாரிடம் ஆலோசனை நடத்திய போது மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை ஏற்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது, அதில் சுனேத்ரா பவார் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இன்று மாலை பதவியேற்பு
பின்னர் சுனேத்ரா மும்பையில் உள்ள ராஜ்பவனில் மாலை 5 மணிக்கு துணை முதல்வராகப் பதவியேற்கிறார். அவரது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ராஜ்பவனில் நடைபெற்று வருகிறது. அஜித் பவார் மகாராஷ்டிராவின் நீண்ட காலம் பணியாற்றிய துணை முதல்வர் ஆவார். அவர் தேவேந்திர பட்னாவிஸ் அரசாங்கத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் கலால் துறைகளை வகித்தார்.
சுனேத்ராவுக்கு விளையாட்டுத்துறை
ஆனால் சுனேத்ரா பவாருக்கு, கலால் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட உள்ளதாகவும், நிதித்துறையை முதல்வர் பட்நவிஸ் தன்வசம் வைத்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
=======