”ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்” : மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக பதில் : இளைஞர்கள் உற்சாக முழக்கம்...!

நீட் விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் தர்மேந்திர பிரதான்.
Dharmendra Pradhan stepped down as Education Minister wake of students' protests regarding NEET issue
Dharmendra Pradhan stepped down as Education Minister wake of students' protests regarding NEET issuegoogle
1 min read

டெல்லி போராட்டம்

நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து டெல்லியில் இளைஞர்கள் மாதக்கணக்கில் போராடி வருகின்றனர். தடியடி, கண்ணீர் புகை தாக்குதல் என எத்தகைய ஒடுக்குதலையும் எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர்.

மாணவர்களின் கோரிக்கைகள்

தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, புதிய சட்டம், தேசிய தேர்வு ஆணையம் அமைத்தல், மாணவர்களுக்கு இழப்பீடு, வயது தளர்வு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகள் வலுத்துள்ளன.

கரப்பான் பூச்சி கட்சி நிபந்தனை

பொதுத்தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, தவறுகளுக்கு பொறுப்பேற்பு, மாணவர்கள் உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றை கொண்ட புதிய சட்டம்,

தேசிய தேர்வு முகமையை கலைத்து விட்டு சட்ட வரம்புக்குட்பட்ட தேசிய தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும்

வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, தள்ளிவைப்பு போன்றவற்றால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இழப்பீடு, வயது வரம்பு தளர்வு உள்ளிட்ட சலுகைகள் அளிக்க வேண்டும்.

வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மத்திய அரசு பேச்சுவார்த்தை

இந்தசூழலில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட மத்திய அரசு, சில கோரிக்கைகளை ஏற்க ஒப்புக் கொண்டது.

மத்திய அரசு பரிசீலனை

கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்து இன்று முடிவு எடுப்பதாக தெரிவித்தது. 3ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற இருந்தது.

பிரதமர் மோடி வாக்குறுதி

நீட் வினாத்தாள் மோசடி பற்றி விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

புதிய மசோதா கொண்டு வரப்படும் என்றும் அறிவித்த அவர், இது தொடர்பாக 2 வீடியோக்களையும் வெளியிட்டார்.

புதிய மசோதா தயாரிப்பு

அதன்படி புதிய மசோதா தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால், 10 ஆண்டு சிறை, 10 கோடி வரை அபராதம் என்பது, புதிய மசோதாவில் இடம்பெற்று இருக்கிறது.

இந்த மசோதா 27ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா

இந்தச்சூழலில் தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

தர்மேந்திர பிரதான் விளக்கம்

10 நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்களால் மனம் கலங்கி இருக்கிறேன். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். இளம் தலைமுறையினரின் கனவை நனவாக்குவது நமது கடமை.

இளைஞர்களின் சக்தி சதி வலையில் சிக்கிவிட ஒருபோதும் விடமாட்டோம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இளைஞர்கள் கொண்டாட்டம்

பிரதான் ராஜினாமாவை தொடர்ந்து, டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினரின் தங்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றி இது என்று அவர்கள் முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

நீட் தேர்வால் உயிரிழந்தவர்களுக்கு அவர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in