புற்றுநோய் மருந்துகளின் விலை 93% வரை அதிரடி குறைப்பு : தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவு!

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 543 புற்றுநோய் மருந்துகளின் விலையை 93% வரை குறைத்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Cancer Medicine Price Cut NPPA Supreme Court Order
Cancer Medicine Price Cut NPPA Supreme Court Ordersource:ai generated
1 min read

Cancer Medicine Price Cut NPPA Supreme Court Order

உச்ச நீதிமன்ற உத்தரவும் புதிய விலைப்பட்டியலும்

இந்தியா முழுவதும் புற்றுநோய் மருந்துகளின் விலையை 30 சதவீத லாப வரம்பிற்குள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவின் அடிப்படையில், 543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலைப்பட்டியலை, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.

விலைக் குறைப்பின் முக்கிய அம்சங்கள்

இந்நடவடிக்கையின் மூலம் புரோஸ்டட், பெருங்குடல், கருப்பை, கர்பப்பை வாஉ புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட 20க்கும் மேறட்ட புற்றுநோய் வகைகளுக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் இம்யூனோ தெரபி மற்றும் உயிர்க் காக்கும் மருந்துகளின் விலைகள் 70 முதல் 93 சதவீதம் வரை குறைந்துள்ளது.

முக்கிய மருந்துகளின் விலை மாற்றங்கள்

  1. பால்போசிக்லிப் (Palbociclib): மார்பகப் புற்றுநோய்க்கான இம்மருந்தின் ஒரு பாக்கெட் விலை ரூ. 40,421-லிருந்து ரூ. 2,720 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

  2. தியோடெபா (Thiotepa): கீமோதெரபி சிகிச்சைக்குப் பயன்படும் இம்மருந்தின் ஒரு குப்பி (Vial) விலை ரூ. 80,072-லிருந்து ரூ. 7,150 ஆகக் குறைந்துள்ளது.

  3. பிற முக்கிய மருந்துகள்: டசாடினிப் (Dasatinib), லென்வாடினிப் (Lenvatinib), அபிராடெரோன் (Abiraterone), ஒலாபரிப் (Olaparib) உள்ளிட்ட முக்கியக் புற்றுநோய் மருந்துகளின் விலைகளும் பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளன.

அமலாக்கத் தேதி மற்றும் நன்மைகள்

புற்றுநோய் மருந்து விற்பனை நிறுவனங்களின் வர்த்தக லாப வரம்பை, அதிகபட்ச சில்லரை விலையில் 30 சதவீதமாக நிர்ணயித்ததன் விளைவாக இந்த விலைக் குறைப்பு சாத்தியமாகியுள்ளது.

அமலுக்கு வரும் நாள்

எனினும் திருத்தப்பட்ட இந்த புதிய குறைந்த விலைகள் அடுத்த மாதம் 9-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 543 வகை புற்றுநோய் மருந்துகளின் விலையை அதிரடியாக குறைத்த இந்த நடவடிக்கை, புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் மிகப்பெரிய நிதி நிவாரணத்தையும் ஆறுதலையும் அளித்துள்ளது.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in