ஒலியை விட 8 மடங்கு வேகம் : இந்தியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை

India Test Hypersonic Missile : 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும், ஒலியை விட 8 மடங்கு வேகத்தில் சென்று துல்லியமாக தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா, வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
India Tests Hypersonic Cruise Missile in DRDO Project Vishnu
India Tests Hypersonic Cruise Missile in DRDO Project VishnuANI
1 min read

ஆயுத தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு :

India Tests Hypersonic Cruise Missile : உலகளவில் வலிமை மிக்க ராணுவத்தை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியா, எதிரிகளின் எத்தகையை சவால்களையும் முறியடிக்கும் வகையில், அதிநவீன ஆயுதங்களை தயாரித்து வருகிறது. முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்களை DRDO என்று அழைக்கப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் தயாரித்து வ்ழங்கி வருகிறது. பல கட்ட சோதனைகளைக்கு பிறகு இந்த ஆயுதங்களில் போர் படைகளில் சேர்க்கப்படுகின்றன.

ஹைபர்சோனிக் ஏவுகணை :

ஏவுகணைகளை தயாரிப்பதிலும் தனித்துவம் மிக்க இந்தியா, 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணையை தயாரித்து உள்ளது. (Extended Trajectory Long Duration Hypersonic Cruise Missile (ET-LDHCM) என்ற ஹைபர்​சோனிக் ஏவு​கணையை டிஆர்​டிஓ வடிவமைத்தது.

ரேடார்களால் கண்டறிய முடியாத ஏவுகணை :

ஒலியை​விட 8 மடங்கு வேகத்​தில் சென்று துல்லியமாக தாக்கும் வல்லமை படைத்தது இந்த ஏவுகணை. அதாவது மணிக்கு 11,000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணையை எந்த நாட்டு ரேடாராலும் கண்டறிய முடியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் குறிப்பிட்ட தொலைவை கடக்கும் என்பதால், ரேடார்களால் துல்லியமாக இதை கண்காணிக்க முடியாது. எனவே, ஹைபர்சோனிக் ஏவுகணை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்தான்.

பிரம்மோசை விட வலிமை மிக்கது :

தற்போது இந்தியாவிடம் உள்ள முதல்தர ஏவுகணையான BrahMos ஏவுகணையைவிட மூன்று மடங்கு வேகம் கொண்டது ஹைபர்சோனிக் ஏவுகணை. மேலும் நான்கு மடங்கு தூரத்தை ஒரே சமயத்தில் கடக்கும் திறனும் வாய்ந்தது. BrahMos ஏவுகணையின் அதிகபட்ச வேகம் மணிக்கு சுமார் 3,675 கி.மீ. ஆகும்.

முப்படைகளுக்கு ஏற்ற ஹைபர்சோனிக் :

வழக்கமான Rotating Compressor ஹைபர்சோனிக் ஏவுகணையில் இருக்காது. வாயுமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை நேரடியாக பயன்படுத்தி தனக்கு தேவையான சக்தியை இது பெறுகிறது. இது அணுஆயுதம் மற்றும் ஏற்கெனவே பயன்படுத்தப்படும் பல ஆயுதங்களை தாங்கிச் செல்லும். நிலம், கடல் மற்றும் வானில் இருந்து ஏவக்கூடியது.

ரஷ்யா, அமெரிக்கா வரிசையில் இந்தியா :

2,000°C வரை வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது. வசதியுடன், தற்​போது இந்த வகை ஏவு​கணை ரஷ்​யா, அமெரிக்கா மற்​றும் சீனா​விடம் மட்​டுமே உள்​ளது. ஹைபர்​சோனிக் ஏவு​கணையை(Hypersonic Missile in India) இந்​தியா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ள​தால், அந்த நாடு​களின் வரிசை​யில் இந்​தி​யா​வும் இணைந்​துள்​ளது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in