

இந்தியாவில் டெங்கு காய்ச்சல்
QDENGA is a live-attenuated, tetravalent dengue vaccine developed by Takeda Pharmaceuticals designed to protect against all four major dengue virus
இந்தியாவில் ஆண்டுதோறும் பருவமழைக்குப் பிறகு தீவிரமடைது டெங்கு காய்ச்சல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்படுத்தும் இந்தக் காய்ச்சல், மருத்துவமனை அனுமதி மட்டுமின்றி சிலசமயம் உயிர்களையும் பறிக்கிறது.
டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி
இந்தியாவில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை மருந்து, மாத்திரைகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில், இந்தியாவில் டெங்கு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
4 வயது - 60 வயது வரை பயன்படுத்தலாம்
ஜப்பானைச் சேர்ந்த பிரபல 'டகேடா' (Takeda) மருந்து நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தடுப்பூசியை, இந்தியாவில் 4 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகில் பதிவாகும் டெங்கு பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் மட்டுமே ஏற்படுவதால், இந்தத் தடுப்பூசி அனுமதி நாட்டின் பொது சுகாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) வழங்கியுள்ளது.
பரிசோதனை இன்றி தடுப்பூசி போடலாம்
முன்பு சந்தைக்கு வந்த டெங்கு தடுப்பூசிகள் போலல்லாமல், 'கியூடெங்கா' தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கு முன்னதாக எவ்வித முன் கூட்டிய இரத்தப் பரிசோதனையும் செய்யத் தேவையில்லை.
யாருக்கு வேண்டுமானாலும் தடுப்பூசி
ஒருவருக்கு ஏற்கனவே டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அல்லது இதுவரை வராவிட்டாலும் யார் வேண்டுமானாலும் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.
3 மாத இடைவெளி - 2 டோஸ்கள்
இந்தத் தடுப்பூசி மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்களாக, செலுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பான செயல்பாடு
டெங்கு வைரஸில் உள்ள நான்கு வகையான பிரிவுகளுக்கும் (Serotypes) எதிராகச் செயல்படும் இந்தத் தடுப்பூசி, மருத்துவப் பரிசோதனைகளில் மிகச் சிறந்த முடிவுகளைத் தந்துள்ளது.
90.4% சிறப்பாக செயல்படுகிறது
டெங்கு காய்ச்சல் காரணமாக நோயாளிகள் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை இது 90.4% வரை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏழு ஆண்டுகள் வீரியம் இருக்கும்
தடுப்பூசி செலுத்திய ஏழு ஆண்டுகள் வரை இதன் வீரியமும் பாதுகாப்பும் உடலில் நிலைத்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு பரிந்துரை
உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்தத் தடுப்பூசிக்குப் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கி, டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் தங்களது பொதுத் தடுப்பூசித் திட்டங்களில் இதனைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.
40 நாடுகளில் டெங்கு தடுப்பூசி
பிரேசில், இந்தோனேசியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.
இப்போது இந்தியாவிலும் இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதால், மழைக்காலம் தீவிரம் அடைந்துள்ள சூழலில், விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்படுகிறது.
==============