”அதல பாதாளத்தில் அணைகளின் நீர்மட்டம்” : சூப்பர் எல் நினோ தாக்கத்தால், ஏமாற்றிய பருவமழை : வறட்சியில் பிடியில் இந்தியா.!

எல் நினோ தாக்கத்தின் எதிரொலியால், 10 ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்திய அணைகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது.
Due to the impact of El Niño, water levels in Indian dams have dropped to a ten-year low
Due to the impact of El Niño, water levels in Indian dams have dropped to a ten-year lowsource:thamizhalai,ai generated
1 min read

10 ஆண்டுகளில் இல்லாத சரிவு

தென்மேற்கு பருவமழை நிறைவடையும் நிலையில், நாட்டின் முக்கிய 178 அணைகளில் உள்ள நீர் இருப்பு அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 70 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பை விட் குறைவாகும்.

குறைந்தது தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வழக்கத்தை விட 12 சதவீதம் குறைவான மழையே பதிவாகியுள்ளது.

2 மாதங்களாக வறட்சி நிலை

பசிபிக் பெருங்கடலில் உருவான எல் நினோவின் வலுவான தாக்கத்தால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீண்ட வறண்ட வானிலையும் தீவிர மழைப் பற்றாக்குறையும் நிலவியது. இதன் காரணமாகக் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி சூழல் உருவாகியுள்ளது.

தென் மாநிலங்களில் நீர்மட்டம் சரிவு

மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையின்படி, தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள 92 அணைகளின் நீர் இருப்பு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

கவலை அளிக்கும் நீர்நிலைகள்

தென்னிந்திய அணைகளில் கடந்த ஆண்டு 87.25 சதவீதமாக இருந்த நீர் இருப்பு, தற்போது 50 சதவீதமாக சரிந்துள்ளது. இப்பகுதியில் பருவமழை வழக்கத்தை விட 23 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

குடிநீர் பஞ்சம், மின் உற்பத்தி பாதிப்பு

அதேபோன்று வட மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு 62 சதவீதமாகவும், கிழக்கு மாநிலங்களில் 73 சதவீதமாகவும் குறைந்துள்ளது. நீர் இருப்பு கணிசமாக குறைந்துள்ளதால், வரவிருக்கும் காலங்களில் குடிநீர் விநியோகம், பாசனம் மற்றும் நீர்மின் உற்பத்தியில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனவே, வடகிழக்கு பருவமழை கைகொடுக்கா விட்டால், கால்நடை தீவனங்களுக்கும் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in