24 மணி நேரம் மும்முனை மின்சாரம் : விவசாயிகளுக்கு EPS வாக்குறுதி

Edappadi Palanisamy on Electricity : 2026ல் அதிமுக ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று, எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்து உள்ளார்.
Edappadi Palanisamy About Three Phase Electricity for Farmers in AIADMK Government
Edappadi Palanisamy About Three Phase Electricity for Farmers in AIADMK Government
1 min read

விவசாயிகளுடன் கலந்துரையாடல் :

Edappadi Palanisamy on Electricity : சட்டமன்ற தேர்தல் முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நெல்லையில் விவசாயிகள், கட்டிட தொழிலாளர்கள், வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியிடம் தான் முறையிட்ட பிறகே, விவசாய கடன்களுக்கான சிபில் ஸ்கோர் முறை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு முறைவைத்து மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காட்டினார்.

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் :

2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

அதேபோன்று, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் நெல் கொள்முதலுக்கான தொகை, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு அதிக மானியம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும் படிக்க : EPS: ‘சிபில் ஸ்கோர்’ இன்றி பயிர்க்கடன் : சாதித்து காட்டிய எடப்பாடி

இயற்கை விவசாயத்திற்கு வரவேற்பு :

இன்று நாட்டில் இயற்கை விவசாயத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்கள், தானியங்களை மிகப்பெரிய விலை கொடுத்து மக்கள் வாங்குகிறார்கள்.இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாகும்.திமுக அரசு திவாலாகி இருக்கிறது, அவர்களிடம் பணம் இல்லை காரணங்களை சொல்லுகிறது. திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுக்கிறது, இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in