தேர்வுகள் முறைக்கேடு விவகாரம் :கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் .”இண்டியா கூட்டணி தலைவர்கள் ஒருமனதாக வலியுறுத்தல்”

நீட் தேர்வு, சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இண்டியா கூட்டணி தலைவர்கள் ஒருமனதாக வலியுறுத்தியுள்ளனர்.
Education Minister should resign. "India Alliance leaders unanimously insist"
Education Minister should resign. "India Alliance leaders unanimously insist" google
1 min read

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்:இண்டியா கூட்டணி வலியுறுத்தல்

சமீபத்தில் நடைப்பெற்ற நீட் தேர்வு, சிபிஎஸ்இ கியுட் தேர்வு ஆகியவற்றில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இண்டியா கூட்டணி தலைவர்கள் ஒருமனதாக வலியுறுத்தியுள்ளனர்.

இண்டியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம்

டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இன்று நடைபெற்ற நிலையில் அக்கூட்டதில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இக்கூட்டதில் கலந்துக்கொண்ட முக்கிய அமைச்சர்கள்

இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகிய தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ், தீபங்கர் பட்டாச்சார்யா, சந்தோஷ் குமார், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புரட்சிகர சோசலிச கட்சியின் எம்.பி பிரேமசந்திரன் உள்ளிட்டோரரும் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் 5 அம்ச முடிவு : அனைத்து கட்சிகளும் ஒப்புதல்

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டுதல் உள்ளிட்டவைகளோடு 2.

நாட்டில் தற்போது நிலவும் தீவிர பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அத்துமீறல்கள், விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

அடுத்ததாக இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆலோசனை நடத்துவது

வாக்காளர் பட்டியல் மற்றும் நேர்மையான தேர்தல் ஆகியவற்றில் நடைபெறும் தலையீடுகள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுத இக்கூட்டதில் முடிவெடுக்கப்பட்டுளதாகவும்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது இண்டியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தொடரும் போன்ற முக்கிய முடிவுகள் இந்த பதவி விலகளோடு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :'I.N.D.I.A' கூட்டணி தலைவர்கள் அவசர ஆலோசனை: கூட்டத்தில் எடுக்கப்பட்ட 8 முக்கிய முடிவுகள் என்னென்ன?

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in