Bihar Election 2025 : புதிய நடைமுறைகள் அறிமுகம் ; தேர்தல் ஆணையம்

Bihar Assembly Elections 2025 New Reforms : பிகார் சட்டசபை தேர்தலில் புதிதாக 17 நடைமுறைகள் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த இருப்பதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Election Commission announcement 17 new reforms for Bihar Assembly elections 2025
Election Commission announcement 17 new reforms for Bihar Assembly elections 2025
1 min read

பிகார் தேர்தல் 2025 :

Bihar Assembly Elections 2025 New Reforms : 243 தொகுதிகளை கொண்ட பிகார் மாநிலத்தில், முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள், நவம்பர் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

17 நடைமுறைகள் அறிமுகம்

சட்டமன்றத் தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நூறு சதவீத இணையதள ஒளிபரப்பு உட்பட 17 புதிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது(EC New Rules for Bihar Election 2025). வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும்போது தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதி ஏற்படுத்த தரப்படுகிறது.

வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு :

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100% இணைய ஒளிபரப்பு மேற்கொள்ளப்படும், தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு சதவீத விபரங்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, 'இசிஐநெட்' செயலியில் பதிவிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குச்சாவடிக்கு 1,200 வேட்பாளர்கள்

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க நடவடிக்கை, வாக்காளர்களுக்கு அதிகாரபூர்வமற்ற அடையாளச் சீட்டுகளை விநியோகிக்கும் மையங்களை வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் அமைத்துக் கொள்ள அரசியல் கட்சியினருக்கு அனுமதி போன்றவையும் பிகார் தேர்தலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க : Bihar Assembly Elections 2025 Date : பிகார் தேர்தல் தேதி அறிவிப்பு

இனி வரும் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இந்த புதிய நடைமுறை கடைபிடிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய வசதிகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in