3 மாநிலங்களில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு, தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கு அறிவிப்பு இல்லை

தமிழகத்தில் ராஜினாமா செய்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்த்ல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை
Election Commission announces by-elections in three states; no announcement for seven constituencies in Tamil Nadu.
Election Commission announces by-elections in three states; no announcement for seven constituencies in Tamil Nadu. google
1 min read

3 மாநிலங்களுக்கு இடைத்தேர்த்ல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சமீபத்தில் 5 மாநில தேர்தலானது நடந்து முடிந்தது, இந்த நிலையில் பிகாரின் பாங்கிபூர் எம்.எல்.ஏ.வாக இருந்த நிதின் நவீன் தனது பதவியை ராஜிநாமா செய்தது

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றும.பி.யின் தடியா எம்.எல்.ஏ. ராஜேந்திர பாரதி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், குஜராத்தின் மஞ்சல்பூர் எம்.எல்.ஏ. யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் உடலநலக் குறைவால் உயிரிழந்துள்ள நிலையில் இங்கு இந்த தொகுதிகள் காலியான தொகுதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது

ஜூலை 30 இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

தற்போது காலியாக உள்ள இந்த மூன்று மாநிலங்களில் வருகின்ற ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது

இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது படி ஜூலை 6 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி டிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் :காலியாக உள்ள 7 தொகுதிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார்.

பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள்

மேலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா,

தொடர்ந்து ,விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர், கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய 6 பேரும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் தங்களை தவெகவில் இணைத்து கொண்டுள்ளனர்

பேரவை தலைவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதவியை ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை தமிழக பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகரிடம் வழங்கியிருந்தனர் , இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் இதுவரை காலியான தொகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இடைத்தேர்தல் ,தமிழகத்திற்கு அறிவிப்பு இல்லை

தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்த எந்த அறிவிப்பையும் தேர்த்ல் ஆணையும் வெளியிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in