TVK Whistle : புதுச்சேரியிலும் விசில் சின்னம் - தவெக மகிழ்ச்சி!

Pondicherry TVK Whistle Symbol : புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
Election Commission has allocated whistle symbol for TVK Tamilaga Vettri Kazhagam to contest in Puducherry Election 2026
Election Commission has allocated whistle symbol for TVK Tamilaga Vettri Kazhagam to contest in Puducherry Election 2026google
1 min read

தமிழகத்தில் தவெக சின்னம்

Pondicherry TVK Whistle Symbol : பிப்ரவரி 2, 2024 ஆம் ஆண்டு விஜய் கட்சியின் தலைவராக தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். பின்னர், உறுப்பினர்கள் தொண்டர்கள் என கட்சி பலப்படுத்தப்பட்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கவுள்ளது. இதற்கிடையில், கரூர் உயிரிழப்பு என பல்வேறு இடையூறுகளை கடந்து வந்த தவெக கட்சி மற்றும் நடிகர் விஜய் தற்பொழுது, மீண்டும் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு என பல்வேறு கோணங்களில் மக்கள் முன் தங்களை முன்னிறுத்தி வருகின்றனர். இந்நிலையில், முதன்முதலாக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் தவெக கட்சிக்கு, தேர்தல் ஆணையம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் சின்னம் குறித்து கேள்வி எழுந்த நிலையில்,அதற்கும் விசில் சின்னமே கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் விசில் சின்னம்

எனவே, புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் தமிழகம் வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், தற்போது புதுச்சேரியிலும் அதே சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.புதுச்சேரியிலும் விசில் சின்னம் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு பொதுச்சின்னமான விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் அதே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழகம் வெற்றிக்கழகத்திற்கு தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழகம் வெற்றிக்கழகம் போட்டியிடுவதற்காக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியிலும் விசில் சின்னம் கிடைத்துள்ளதால், ஒரே பொதுச்சின்னத்தில் தமிழகம் வெற்றிக்கழகம் தேர்தலை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதற்கு, புதுச்சேரி தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in