5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்காளர்களுக்கான வசதிகள் என்னென்ன! : வாங்க தெரிஞ்சுக்கலாம்

EC Introduced New facilities for voters in 5 States Assembly Election 2026 : ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், வாக்களர்களுக்காக புதிய வசதிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
Election Commission has introduced new facilities for voters in the five state assembly elections 2026
Election Commission has introduced new facilities for voters in the five state assembly elections 2026google
1 min read

EC Introduced New facilities for voters in 5 States Assembly Election 2026 : தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய வசதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் :

* வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே செல்போன்களை வைக்க பிரத்யேக வசதி

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களை எளிதாக அடையாளம் காண அவர்களின் வண்ணப் புகைப்படம்

* கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,200 ஆயிரத்து 200 வாக்காளர்கள் மட்டுமே அனுமதி

* வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் வேட்பாளர்கள் தங்களின் உதவி மையங்களை அமைத்துக் கொள்ளலாம் எ

* ECINet செயலி மூலம் வாக்காளர்கள் தங்களின் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம்.

* வாக்குப்பதிவு நிலவரம், வேட்பாளரை அறிந்து கொள்ளுதல் போன்ற 40 வகையான வசதிகள் ஒருங்கிணைப்பு

* வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதம் அறிவிப்பு

* சமூக வலைதளம் மூலம் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

* ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

* 5 மாநிலங்களில் 17 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி

* 824 தொகுதிகளில் 2 லட்சத்து 19 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்

* முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சிறப்பு ஏற்பாடு

* 8 லட்சத்து 50 ஆயிரம் காவலர்கள், துணை ராணுவ படை வீரர்கள் உட்பட மொத்தம் 25 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்

* 20 நாடுகளின் தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் வாக்குப்பதிவை பார்வையிட உள்ளனர்

* SIR மூலம் தகுதியற்ற யாரும் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in