SIR : 22 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் : ஏப்ரலில் தொடங்கும் எஸ்.ஐ.ஆர் பணிகள்!

Election Commission Letter To 22 States : தேர்தல் நடக்கவிறுக்கும் மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளுக்கான முன்னெற்பாடுகளை மேற்கொள்ளும்படி கடிதம் அனுப்பியுள்ளது.
Election Commission has sent letter to 22 states to hold elections, asking to make preparations for SIR Electoral work.
Election Commission has sent letter to 22 states to hold elections, asking to make preparations for SIR Electoral work.Source : ECI
1 min read

பீகார் தேர்தல்

Election Commission Letter To 22 States : பீகார் சட்டமன்ற தேர்தலில், கடும் போட்டிகளுக்கு இடையில், எஸ்.ஐ. ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேர்தல் நடைபெற்று முடிந்தது.

பாஜக ஐக்கிய ஜனதா தளம் தலைமையின் கூட்டணியில் நிதிஷ்குமார் மீண்டும் 10வது முறையாக முதல்வராக பதவியேற்று பீகாரை தன்வசப்படுத்தினார்.

ராஷ்டிரிய ஜனத தளத்தின் சார்பாக களமிறங்கிய தேஜஸ்வி யாதவின் வாக்கு சதவிகிதம் மிகவும் குறைந்து 2010 க்கு பிறகு 3 வது இடத்திற்கு சரிந்தார்.

இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் வெற்றி கண்டாலும், தேசிய கட்சியான காங்கிரஸில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. பல மாநிலங்களில் தோல்விமுகம் காண்பதால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தொடர்ந்து எஸ்ஐஆர் பணிகளையும், தேர்தலில் ஆள்மாறாட்டம் நடைபெற்று இருக்கிறது என்று பல அடுக்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

தமிழகத்தின் தேர்தல் களநிலவரம்

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, தமிழகத்தில் மிக விரைவாக எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏறக்குறைய 2 மாதங்களே உள்ள நிலையில், இந்த முறைவருகை தந்துள்ள புதிய கட்சிகளால், வாக்கு வித்தியாசம் மற்றும் தேர்தல் நகர்வுகளும் அவசரங்களும், தொடர்ந்து தேர்தல் நிலவரங்களை மக்கள் மத்தியலும், அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியிலும் பதட்டத்தை ஏற்படுத்து வருகிறது.

22 மாநிலங்கள் கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம்

இந்த சூழலில் எஸ்ஐஆர் பணிக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

இதன்படி ஆந்திரா, கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி, டையூ-டாமன், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா, உத்தரா கண்ட் ஆகியவற்றில் வரும் ஏப்ரலில் எஸ்ஐஆர் பணி நடைபெறும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in