5 மாநிலத் தேர்தல் : அதிகாரிகளை இடமாற்றம் செய்க : EC அதிரடி உத்தரவு

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
Election Commission has ordered the transfer of government officials working in the same place in the five states where assembly elections are being held
Election Commission has ordered the transfer of government officials working in the same place in the five states where assembly elections are being heldGoogle
1 min read

5 மாநில சட்டமன்ற தேர்தல்

Election Commission has ordered the transfer of government officials working in the same place in the five states where assembly elections are being held : தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாமில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை படிப்படியாக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

எஸ்ஐஆர் பணிகள் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம்

இந்தநிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

அதிகாரிகளை இடமாற்றம் செய்க

அதில் தங்களுடைய சொந்த மாவட்டத்தில் 3ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அதிகாரிகளையும் இடமாற்றம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் நேரடியாக தொடர்புள்ள அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மருத்துவர்கள், பொறியாளர்களுக்கு விலக்கு

மருத்துவர்கள், பொறியாளர்கள், வரும் மே மாதம் ஓய்வு பெறுவோருக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து மற்ற அதிகாரிகளை கட்டாயம் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

விரைவில் தேர்தல் தேதி

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மே.வங்க மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் மாதமே தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதற்காக அட்டவணை இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் குழு வருகை

தேர்தல் ஏற்பாடுகள் பற்றி நேரில் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் குழு விரைவில் தமிழகம் வர இருக்கிறது. அதற்கு முன்னதாக வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

=====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in