

ஐந்து மாநிலத் தேர்தல்
Tamil Nadu Assembly Election 2026 Date : தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்கள் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கின்றன. இதற்கான பணிகளை ஒருமாத காலத்திற்கு முன்பே தேர்தல் ஆணையம் துவக்கி விட்டது.
தேர்தல் ஆணையம் ஆலோசனை
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார் தலைமையிலான குழு 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் பற்றி, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
5 நாட்களில் தேர்தல் தேதி
அதைத்தொடர்ந்து, 3 முதல் 5 நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஒரேகட்ட தேர்தல்?
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் பலகட்ட தேர்தல்
மேற்கு வங்கத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாமில் இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது.
தமிழகம் ஏப்.23ல் வாக்குப்பதிவு?
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் இருக்கலாம்.
தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட உடனே, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
=====