Rajyasabha Elections : அதிகரிக்கும் NDA பலம், 140-ஐ நெருங்குகிறது : காங்கிரஸ் No loss, No gain!

மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு மார்ச்சில் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜகவின் பலம் 140ஐ நெருங்கும் எனத் தெரிய வந்துள்ளது.
Elections to the vacant seats in Rajya Sabha due in March, BJP's strength will approach 140 seats
Elections to the vacant seats in Rajya Sabha due in March, BJP's strength will approach 140 seatsgoogle
1 min read

ராஜ்யசபா தேர்தல்

ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 243 இடங்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 134 ஆக உள்ளது.

காலியாகும் 37 இடங்கள்

மஹாராஷ்டிரா, ஒடிசா பிகார், சத்தீஸ்கர், ஹரியானா, அசாம், தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம் என 10 மாநிலங்களில் உள்ள ராஜ்யசபா எம்பிக்களில் 37 பேர் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகின்றனர். இந்த காலியிடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ல் நடக்க உள்ளது.

NDA பலம் 140ஐ நெருங்கும்

தேர்தலுக்கு பிறகு ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 140ஐ நெருங்கும் எனத் தெரிய வந்துள்ளது.

மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் பி. செல்வராஜ், கனிமொழி சோமு, எம். தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது.

இதுதவிர்த்து, மகாராஷ்டிரா, பிகார், ஒடிசா, அசாம், தெலங்கானா, சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் மொத்தம் 37 இடங்கள் காலியாகின்றன.

பாஜகவுக்கு கூடுதல் இடங்கள்

மகாராஷ்டிரா, பிகார், ஒடிசா உள்பட 6 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. எனவே அந்த கூட்டணிக்கு மாநிலங்களவையில் 4 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் 7 இடங்கள் காலியாகும் நிலையில், ஆளும் பாஜக கூட்டணி 6 இடங்களை கைப்பற்றும். பிகாரில் உள்ள 5 இடங்களில் 3 இடங்கள் ஆளும் ஜேடியூ மற்றும் பாஜக கூட்டணி வசம் உள்ளன.

ஒடிசாவில் உள்ள 4 இடங்களில் பாஜக குறைந்தபட்சம் 3 இடங்களை எளிதாகக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

140- ஐ நெருங்கும் என்டிஏ

எனவே, 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் தற்போது, பாஜக கூட்டணிக்கு 133 இடங்கள் உள்ள நிலையில் அது 137ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன் எப்போதும் இல்லாத வகையில் ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவது, பாஜக அரசுக்கு இனி சாதகமாக இருக்க போகிறது.

முக்கியமான சட்ட மசோதாக்களை ராஜ்யசபாவில் மத்திய பாஜக அரசு கொண்டு வரும் போது, இனி அதை நிறைவேற்ற யார் தயவையும் எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை வராது.

காங்கிரஸ் லாபமோ, இழப்போ இல்லை

மற்றொரு தேசிய கட்சியான காங்கிரசை பொருத்தவரை, ஹிமாச்சல், தெலங்கானா, சத்தீஷ்கர், ஹரியானாவில் இருந்து நான்கு எம்பிக்களை பெறுகிறது.

நான்கு பேர் ஓய்வு பெறும் நிலையில், நான்கு பேர் வருவதால், அந்தக் கட்சிக்கு லாபமும் இல்லை, இழப்பும் கிடையாது.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in