மணிப்பூர் முதல்வரானார் கேம்சந்த் சிங் : 2 பேர் துணை முதல்வர்கள்

Manipur New CM Yumnam Khemchand Singh : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, முதல்​வ​ராக பதவியேற்றார் யும்​நம் கேம்​சந்த் சிங் பதவியேற்றார்.
End of President's rule in Manipur, Yumnam Khemchand Singh took oath as Chief Minister
End of President's rule in Manipur, Yumnam Khemchand Singh took oath as Chief Minister
1 min read

ஜனாதிபதி ஆட்சி வாபஸ்

Manipur New CM Yumnam Khemchand Singh Sworn In As Manipur Chief Minister, Gets 2 Deputy Chief Ministers : வடகிழக்க மாநிலமான மணிப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது.

இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி இந்த ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாஜக அரசு ராஜினாமா

குக்கி மற்றும் மெய்தி பிரிவினரிடையே நிலவி வந்த மோதல் உச்சத்தை அடைந்ததால், ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக முதல்வர் பைரன் சிங் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது சட்டசபை கலைக்கப்படவில்லை, மாறாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மணிப்பூரில் இயல்புநிலை

நிலைமை மேம்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது.

மத்திய அமைச்சரவையின் கோரிக்கையை ஏற்று, குடியரசு தலைவர் ஆட்சியை ரத்து செய்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.

முதல்வராக கேம்சந்த் சிங்

இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக யும்​நம் கேம்​சந்த் சிங் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அவருக்கு மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவிப் ​பிரமாண​மும், ரகசிய காப்​புப் பிர​மாண​மும் செய்து வைத்​தார்

இரண்டு துணை முதல்வர்கள்

கூட்​டணி அரசில் சமூக சமநிலை​யைப் பேணும் வித​மாக, குகி சமூகத்​தைச் சேர்ந்த பாஜக எம்​.எல்.ஏ நெம்சா கிப்​ஜென் மற்​றும் நாகா மக்​கள் முன்​னணி​யைச் சேர்ந்த எல். டிக்ஹோ ஆகியோர் துணை முதல்​வர்​களாகப் பதவி​யேற்​றனர்.

நெம்சா கிப்​ஜென், டெல்​லி​யில் உள்ள மணிப்​பூர் பவனில் இருந்து காணொலி வாயி​லாகப் பதவி​யேற்​றுக் கொண்​டார். பாஜக​வின் கோவிந்​தாஸ் கொந்​தவுஜம், என்பிபி கட்​சி​யின் கே. லோகன் சிங் ஆகியோர் அமைச்​சர்​களாக பொறுப்​பேற்​றனர்.

வளர்ச்சி பாதையில் மணிப்பூர்

தலைநகர் இம்​பாலில் உள்ள மக்​கள் பவனில் பதவி​யேற்பு விழா நடை​பெற்​றது. "புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டதன் மூலம், அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவை அரசின் வழிகாட்டும் கொள்கைகளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என கேம்சந்த் சிங் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

லட்சியங்களை எட்டுவோம்

"விக்சித் பாரத் மற்றும் விக்சித் மணிப்பூருக்கான பார்வையை நோக்கிய அரசியல் பயணம் சவால்கள் இல்லாமல் இல்லை, ஆனால் இந்த லட்சிய இலக்குகளை அடைவதில் எங்கள் முன்னுரிமைகள் உறுதியாக சீரமைக்கப்படும்" என்றும் கேம்சந்த் சிங் கூறினார்.

யும்னம் கேம்சந்த் சிங் ஒரு நீண்டகால ஆர்எஸ்எஸ் நிர்வாகி மற்றும் ஒரு அமைப்பு சார்ந்த தலைவர் ஆவார். அவர் முன்பு மணிப்பூரில் அமைச்சராக பொறுப்பு வகித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in