”எம்ஜிஆர் முதல் விஜய் வரை” : கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் : குவியும் அரசியல், சினிமா பிரபலங்கள் : வெற்றியின் நம்பிக்கை!

கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் சென்று வழிபாடு செய்கிறார்கள். இதன் பின்னணியில் உள்ள நம்பிக்கை என்ன என்று பார்ப்போம்.
Everyone from political leaders to film celebrities visits the Kollur Mookambika Temple to offer prayers
Everyone from political leaders to film celebrities visits the Kollur Mookambika Temple to offer prayersgoogle
2 min read

தாய் மூகாம்பிகை கோவில்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 458 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொல்லூர். இங்கு சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் ஒன்றான மூகாம்பிகை வீற்றிருக்கிறார்.

சிவசக்தியாக மூகாம்பிகை

இங்கு மூகாம்பிகை சிவசக்தி சொரூபத்தில் காட்சி தருகிறார். மகிசாசூரனை வதம் செய்த மூகாம்பிகை அம்மன் எழுந்தருளி உள்ள இந்த கோவில், மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவில் கொடசாத்திர மலை அடிவாரத்தில் வற்றாத ஜீவ நதியான சவுபர்னிகா ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது.

அலங்கார ரூபினியாய் மூகாம்பிகை

தாய் மூகாம்பிகை ரத்தின கற்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார ரூபினியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஜோதிர்லிங்க அதிசயம்

இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஜோதிர்லிங்கத்தில் ஒரு அதிசயம் இருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

லிங்கத்தின் மத்தியில் தனித்தன்மை வாய்ந்த அதிசயிக்கத்தக்க தங்க நிற கோடு ஒன்று இருக்கிறது. இது லிங்கத்தை சரிபாதியாக பிரிக்கிறது. லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் போது மட்டும் இது ஒளிரும்.

ஆதிசங்கரர் வழிபட்ட லிங்கம்

அந்த கோடு பிரிப்பதில் லிங்கத்தின் வலது பாதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரையும், இடது பாதி காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த பஞ்சலோக சிலைக்கு ஆதிசங்கரர் அபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவில் உள்ள பிரபலமாக கோவில்களில் ஒன்றாக கொல்லூர் மூகாமைபிகை கோவில் உள்ளது. அதிகமாக பிரபலங்கள் வந்து செல்லும் கோவிலாகவும் இருக்கிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழிபாடு

தமிழகத்தின் முன்னாள் முதலவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இங்கு சென்று வழிபட்டு இருக்கிறார்கள். அதிலும் தீவிர பக்தராக எம்ஜிஆர் அளித்த தங்க வாள்தான் இன்றும் அம்பிகையின் கைகளில் ஒளிர்கிறது.

கன்னட திரைப்பிரபலங்ள்

கன்னடத் திரையுலகை சேர்ந்த ரிஷப் ஷெட்டி, துனியா விஜய் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட நடிகர்களும் திரைப்பட இயக்குனர்களும் இந்த கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் திரைப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோரும் மூகாம்பிகையின் பக்தர்கள் தான்.

பாலிவுட் பிரபலங்கள்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகை பூஜா ஹெக்டே் மற்றும் நடிகை அனுஷ்கா ஆகியோர் கொல்லூருக்கு பலமுறை வருகை தந்து இருக்கிறார்ள்.

வழிபாடு நடத்தும் அரசியல் தலைவர்கள்

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் மூகாம்பிகா கோவிலுக்குத் தவறாமல் வருகை தருகின்றனர்.

கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனும் ஆண்டுக்கு ஒருமுறை வந்து வழிபாடு நடத்துவார் எனக் கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவும் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்திருப்பதோடு, அம்மனும்மு வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை சமர்பித்து இருக்கிறார்.

பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் தனது பிறந்தநாளை இக்கோயிலில் கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு ஜனவரி மாதமும், அவர் அம்மனுக்கு முன்பாக "சங்கீதார்ச்சனை" செய்கிறார். நடிகர் ரஜினிகாந்தும் இங்கு சாமி தரிசனம் செய்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் வரக் காரணம்

அரசியல் கட்சி தலைவர்கள் இங்கு அடிக்கடி செல்வதற்கு ஆன்மீகம், ஜோதிடம் மற்றும் அரசியல் ரீதியாக காரணங்கள் சொல்லப்படுகிறது.

இந்த கோவிலில் முப்பெரும் தேவியர் உள்ளனர். கொல்லூர் மூகாம்பிகை அம்மனாக மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மாகாளி ஆகிய முப்பெரும் தேவியரின் வடிவமாகத் திகழ்கிறார் மூகாம்பிகை.

இங்குள்ள சுயம்பு லிங்கத்தில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.

அதிகாரம், செல்வாக்கு மற்றும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை முப்பெரும் தேவிகள் கொடுப்பதாக நம்பிக்கை.

இதனால் இந்த கோவிலில் வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.

சண்டி ஹோமம் சிறப்புகள்

இந்தக் கோவிலில் சண்டி ஹோமம் (சத்ரு சம்ஹாரம்) நடத்தும்போது அரசியலில் எதிர்ப்புகளும், துரோகங்களும், மறைமுக எதிரிகளும் வீழ்த்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல்வர் விஜய் தரிசனம்

அந்தவகையில்தான் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜயும் வழிபாடு நடத்தி இருக்கிறார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பங்கேற்று வேண்டுதலை நிறைவேற்றினார்.

================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in