தேர்வு முறைகேடு : ஜார்கண்ட்டில் தீவிரமடைந்திருக்கும் மாணவர்கள் போராட்டம் : உரிய விசாரணை கோரி ஆர்ப்பாட்டங்கள்..!

தேர்வு மோசடிகளுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் ,17 நாட்களாக தொடரும் இப்போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
Exam irregularities: Student protests intensify in Jharkhand
Exam irregularities: Student protests intensify in Jharkhandgoogle
2 min read

தேர்வு முறைக்கேடுகள் ஜார்கண்டில் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் , வழக்கை விசாரித்தி சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர், 17 நாட்களாக தொடரும் இப்போராட்டம் தற்போது தீவிரமடைந்து பேசுப்போருளாகியுள்ளது

தேர்வு முறைக்கேட்டின் பிண்ணனி

கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி 14-வது ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் (Jharkhand public service commission) சார்பில் 103 காலி பணியிடங்களுக்கான தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்கொண்டனர் . இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது மேலும், பிரிவு வாரியான மதிப்பெண்களையும் வெளியிடவில்லை என்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

புகார்களுக்கு அரசு உரிய பதிலை அளிக்கவில்லை , மாணவர்கள் குற்றச்சாட்டு

இந்த தேர்வு முறைகேடுகள் குறித்து மாணவர்களுக்கு முறையாகப் பதிலளிக்கப்படவில்லை.சி.ஐ.டி. விசாரணையிலும் இத்தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து எந்த தகவலும் முறையான தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

தேர்வுகள் முறைக்கேடு ,ஜார்கண்ட் சட்டமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள்

இந்த தேர்வுகள் முறைகேடுகள் குறித்து எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் முறையான பதிலளிக்காமல் இநுந்த ஜார்க்கண்ட் மாநில அரசை கண்டித்து, ராஞ்சியில் உள்ள ஜெய்பால் முண்டா மைதானத்தில் குவிந்து “ஜார்க்கண்ட் அரசே! சுயநினைவிற்கு வா!” என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட முக்கியமாக கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம்

நடந்து முடிந்த ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; ஓ.எம்.ஆர். தாள்களில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்;

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது, இந்த சூழலில் ,இந்த கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்ற கோரி சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்வருகின்றனர்

மாணவர்களுக்கை கட்டுப்படுத்த மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

17 நாட்களாக தொடர்ந்து நடந்துவரும் இப்போராட்டத்தின் மீது ஜார்க்கண்ட் மாநில காவல் துறை மாணவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது ,

ஜார்க்கண்டில் இந்தப் பொது சேவை ஆணையத் தேர்வில் முறைகேடு நடப்பது இது முதல் முறையல்ல இதற்கு முன்பு பல தடவை முறைக்கேடுகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது

ஜார்கண்ட் மாணவர் போராட்டம் , ஆதரவளித்த சிஜேபி

ஜார்கண்ட் பல ,முறை இதுபோன்றே முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்,இதுகுறித்து மாணவர்கள் புகார்களை எழுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டமே தீர்வு என மாணவர்கள் போராட்டக்களம் புகுந்துள்ளனர். இப்போராட்டத்திற்கு கரப்பான் ஜனதா கட்சியும் சி.ஜே.பி. தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

==========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in