தொடரும் தேர்வு குளறுப்படி :இயக்கம் முன்னெடுப்பு
அதேபோலவே நாட்டில் வேலைவாய்ப்பின்மையும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனை முதன்மையாக கொண்டு இயக்க போரட்டத்தை முன்னெடுப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்
மாணவர்களுக்காக இயக்கம் தொடக்கம்
வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மைஆகியவற்றுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களைத் திரட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்கம் ஒன்றை முன்னெடுத்திருந்தார் ராகுல் காந்தி
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாநாடு
ராகும் முன்னெடுத்திருக்கும் இந்த மாநாடானது , நீட் தேர்வு பயிற்சி மையம் அதிகமுள்ள இடங்களிலே முதன்மையாக நடைப்பெறும் என்றும் ,
அதன்படி ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜூன் 17-ல் முதல் மாணவர் மாநாடு தொடங்கிய நிலையில் அதனை தொடர்ந்தி இதர பகுதிகளிலும் மாநாடு தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்
ஜூலை 10ல் அலகாபாத், பிரயாக்ராஜ் மாநாடு
ஜூலை 11 - பிகார் மாநிலம் பாட்னா,ஜூலை 14 - தேசியத் தலைநகர் தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் மிகப்பெரிய மாநாடும் தொடர்ந்து ,கோட்டாவில் (ஜூன் 17) அலகாபாத்தில் (ஜூலை 10), பாட்னாவில் (ஜூலை 11) மற்றும் தில்லியில் (ஜூலை 14) நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்காக தேசிய மாணவர் சங்கம், இந்திய இளைஞர் காங்கிரஸ், மாநில காங்கிரஸ் கமிட்டிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் மூலமாக விரிவான மக்கள் சேர்க்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய ராகுல்
தேர்வு முறைக்கேடுகளை கண்டித்து பல்வேறு பகுதிகளில் இயக்க போரட்டத்தை முன்னெடுத்திருக்கும் ராகுல் காந்தி , தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடையே கையெழுத்தி இயக்கத்தை தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி
எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
தேர்வு வினாத்தாள் கசிவு, அதிக கட்டணம் வசூல் ஆகியவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த கல்வி முறை உங்கள் கனவுகளை சிதைத்திருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தினர் வாழ்நாள் சேமிப்புகளை உங்கள் கல்விக்காக செலவிட்டிருந்தால், மாணவர்களுக்கான குரல் என்ற இந்த இயக்கம் உங்களுக்கானதுதான்.
இது வெறும் பிரச்சார இயக்கம் மட்டுமல்ல, மலிவு விலையிலான கல்வி, நியாயமான தேர்வு முறைகள் மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்புகள் போன்ற பிரச்னைகளை மாணவர்கள் எழுப்புவதற்கான ஒரு தளம். உங்கள் கோரிக்கைகளை நேரடியாக அரசாங்கத்திடம் கொண்டு செல்வதற்கான தளம்.
இணையதளத்தை பயன்படுத்தி கையெழுத்திடுங்கள் : ராகுல்
இந்த இயக்கத்தில் இணைய கீழேவுள்ள இணைப்பை கிளிக் செய்து, உங்கள் பெயரை பதிவு செய்து, உங்கள் கருத்துகளை பகிருங்கள், மனுவில் கையெழுத்திடுங்கள். எந்தளவுக்குஅதிகமாக மாணவர்கள் இணைகிறீர்களோ அந்தளவுக்கு மாணவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்” என தெரிவித்துள்ளார். இதற்காக https://rahulgandhi.in/chhatron-ki-goonj என்ற இணையதளத்தின் இணைப்பையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
தேர்வு முறைக்கேடு குறித்து இவ்வாறு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி
==================