ரயில் கட்டண உயர்வு : இன்று முதல் அமல்

விரைவு ரயில்களில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரயில் கட்டண உயர்வு : இன்று முதல் அமல்
1 min read

இந்தியா முழுவதும் 12,617 பயணியர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலர் நாள்தோறும் லட்சக் கணக்கானோர் பயணித்து வருகின்றனர். பயணிகளுக்கு பெரிய பாதிப்பு இல்லாமல், சிறிய அளவுக்கு கட்டண உயர்வு குறித்து பரிசீலித்து வருவதாக, ரயில்வே துறை கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இதற்கு முன்பு 2020ம் ஆண்டு ரயில் கட்டணத்தில் மாற்றம் செய்தியப்பட்டது. இதையடுத்து தற்போது ரயில் கட்டணத்தை சிறிது உயர்த்தி, ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, 500 கி.மீ.க்கு மேலான நீண்ட துார பயணங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

புறநகர் ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் இல்லை. விரைவு ரயில்களில் 500 கி.மீ. வரை கட்டண அதிகரிப்பு கிடையாது. 501 முதல் 1,500 கி.மீ. துாரத்துக்கு 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

1,501 முதல் 2,500 கி.மீ.க்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 2,501 முதல் 3,000 கி.மீ.க்கு 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 'ஸ்லீப்பர்' முன்பதிவு வகுப்பு பெட்டியில், 1 கி.மீ.க்கு 5 காசு அதிகரிப்பு. முதல் வகுப்பு 'ஏசி' 1 கி.மீ.க்கு 5 காசு அதிகரிப்பு பிற 'ஏசி' வகுப்புகளுக்கு, 1 கி.மீ.க்கு 2 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ முன்பதிவு கட்டணம், அதிவிரைவு ரயில் கூடுதல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களில் எந்த மாற்றம் இல்லை.ஏற்கனவே எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு எந்த மாற்றமும் இன்றி, தற்போதைய கட்டணமே பொருந்தும் என்றும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in