NEET, JEE: முக அடையாள தொழில்நுட்பம், லைவ் போட்டோ, 2026ல் அறிமுகம்

NEET, JEE Exam New Rules 2025 : நீட், ஜேஇஇ தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க தேர்வர்களுக்கு முக அடையாள தொழில்நுட்பம் 2026ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
Facial recognition technology is being introduced for candidates from 2026 to prevent malpractices in NEET and JEE exams
Facial recognition technology is being introduced for candidates from 2026 to prevent malpractices in NEET and JEE exams
2 min read

தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகள்

NTA to introduce facial biometric verification, live photography in major entrance exams from 2026 : என்டிஏ என்று அழைக்கப்படும் தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் தேசிய அளவில் நீட் மற்றும் ஜேஇஇ மெயின் உள்ளிட்ட தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் தேசிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆள்மாறாட்டம், குளறுபடி

முறைகேடுகள் செய்யப்படுவதாகவும், ஆள்மாறாட்டம் மூலம் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தேர்வுகளை வெளிப்படை தன்மையுடனும், கட்டுபாடுகளுடன் பாதுகாப்பாக நடப்பதை மேம்படுத்த மத்திய அரசின் மூலம் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

உயர்மட்ட குழு பரிந்துரை

பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த இந்தக் குழுவின் பரிந்துரையின்படி, தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

முக அடையாள தொழில்நுட்பம்

அதன்படி, மாணவர்கள் தேர்விற்கு அனுமதிக்கும் முன்பு ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுப்டம் மூலம் அவர்களை உறுதிப்படுத்தும் முறையும், விண்ணப்பத்தின்போது லைப் போட்டோ எடுக்கும் முறையும் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் 2026ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகின்றன.

தேர்வு முகமையின் தேர்வுகள்

தேசிய தேர்வு முகமையின் மூலம் தேசிய அளவில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள், யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மிக முக்கியமாக இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் நுழைவுத் தேர்வான நீட் (NEET-UG) மற்றும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ மெயின் (JEE Main) ஆகிய தேர்வுகளில் நாழு முழுவதும் லட்சக்கணக்கில் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

தேர்வு குளறுபடிகள் - சர்ச்சை

இந்த தேர்வு முறைகள் ஏற்கனவே கடுமையாக இருக்கும் நிலையில், முறைகேடுகள் நடக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. குறிப்பாக, வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. 2024ம் ஆண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு(NEET Question Paper Leak), தேர்வில் முறைகேடு, மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல் என பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது.

முக அடையாள அம்சம்

கடந்த ஆண்டு டெல்லியில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் ஆதார் அடிப்படையிலான முக அடையாளம்(Aadhaar Facial Recognition in NEET JEE Exam ) காணும் அம்சம் பரிசோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. UIDAI, NIC உதவியுடன் அமல்படுத்தப்பட்ட இந்த சிறப்பு அம்சம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, தேசிய அளவில் இதனை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடிப்படையில் முக அடையாளம்

இதன்படி, தேர்வு மையங்களில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, ஆதார் அடிப்படையிலான ஃபேஷியல் ரெகக்னிஷன் (Aadhaar Based Face Authentication) மூலம் அடையாள சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.

லைவ் போட்டோ அம்சம்

இதுமட்டுமின்றி எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி விண்ணப்பங்களில் உள்ளது போன்று, விண்ணப்பிக்கும்போதே மாணவர்கள் அவர்களின் புகைப்படத்தை அப்போதே எடுத்து பதிவேற்றம் செய்யும் வகையில் லைவ்போட்டோ அம்சம் (Live Photo) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2026ல் பாதுகாப்பு முறைகள் அறிமுகம்

லைப் போட்டோ மட்டுமின்றி, மாணவர்கள் அவர்களின் சமீபத்திய புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பழைய புகைப்படங்கள் எடுத்துகொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள இளநிலை நீட் (NEET UG 2026) மற்றும் ஜேஇஇ மெயின் (JEE Main 2026) தேர்வுகளில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுவதை, இளைஞர்கள் வரவேற்று இருக்கிறார்கள்.

======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in