
பாஜகவில் பயணத்தை தொடங்கிய மைதிலி தாக்கூர் :
Singer Maithili Thakur Join BJP in Bihar Assembly Election 2025 : என்.டி.ஏ கூட்டணியின் பீகார் பிரச்சாரத்திற்கு பாடகி மைதிலி தாக்கூர் மிகப்பெரிய ஊக்கமாக இருப்பார் என்றும் மைதிலி அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் என்.டி.ஏ கூட்டணி கூடுதலாக 5 முதல் 8 இடங்களை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரின் புகழ்பெற்ற நாட்டுப்புற, பாரம்பரிய பாடகி மைதிலி தாக்கூர் இப்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவர் பாஜகவில் இணைந்தார். அவர் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தர்பங்காவில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிடலாம். இதனால், அலிநகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ மிஷ்ரிலால் யாதவின் சீட் கொடுக்கப்படாதது கிட்டத்தட்ட உறுதி.
பீகார் பிரச்சாரத்தில்
என்.டி.ஏ கூட்டணியின் பீகார் பிரச்சாரத்திற்கு பாடகி மைதிலி தாகூர் மிகப்பெரிய ஊக்கமாக இருப்பார் என்று கூறப்படும் நிலையில், அவர் 40 தொகுதிகளில் நட்சத்திர பிரச்சாரகராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். 2020 முதல் என்டிஏ இங்கு 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மைதிலி அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் என்.டி.ஏ கூட்டணி கூடுதலாக 5 முதல் 8 இடங்களை மேலும் கைப்பற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைதிலி தாக்கூருக்கு வாழ்த்து
பிரபல பாடகியான இவர் தற்போது பாஜகவில் இணைந்து பிரச்சாரம் செய்ய உள்ளது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.ஆனால், 5 முதல் 8 இடங்களை என்.டி.ஏ கூட்டணி கைப்பற்றும் என்று அரசியல் வட்டாரங்களில் கணிக்கப்பட்டுள்ள நிலையில், பாடகி மைதிலி தாகூருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மைதிலி தாகூர் குடும்பப் பின்னணி
மைதிலி தாகூர் ஜூலை 25, 2000 அன்று பிறந்தவர். அவருக்கு தற்போது 25 வயது. பீகாரின் மதுபனியைச் சேர்ந்தவர். ஆனால் டெல்லியின் நஜாப்கரில் நீண்ட காலமாக வசித்து வரும் இவர் , சிறுவயது முதலே நீண்ட காலமாக வேலை இல்லாததால், குடும்பம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு இரண்டு சகோதரர்களுடன் வளர்ந்து வந்தார்.
இசையில் சாதித்த மைதிலி தாகூர்
குடும்பப் பிரச்சினைகள் மற்றும் இசைக்காக தனது முழு நேரத்தையும் ஒதுக்க வேண்டிய அவசியம் காரணமாக, மைதிலி தாக்கூர் 5 ஆம் வகுப்பு வரை வீட்டிலேயே படித்தார். பின்னர், 12-13 வயதில், அவர் ஒரு எம்.சி.டி பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், மைதிலியின் இசைத் திறமை அவருக்கு தனியார் பள்ளியான பால் பவன் சர்வதேச பள்ளியில் உதவித்தொகையைப் பெற்றுத் தந்தது.
மேலும் படிக்க : பிகார் NDA கூட்டணி உடன்பாடு: ஐக்கிய ஜனதா தளம், பாஜக 101 தொகுதிகள்
மைதிலி தாக்கூர் இசைப்பயணம்
மைதிலி தாக்கூர் தனது தந்தை, தாத்தாவிடமிருந்து இசைப் பயிற்சி பெற்றார். சிறு வயதிலிருந்தே, அவர் பாரம்பரிய இசை, நாட்டுப்புற இசையில் பயிற்சி பெற்று வருகிறார். பல வருட பயிற்சி அவரை இசையில் மிகவும் வலிமையாக்கியுள்ளது. இதனால், கலையின் மூலம் காலடி பதித்த அவர், இன்று மாபெரும் அரசியல் பிரபலாமாக தேர்தல் கலத்தில் வலம் வரவுள்ளார்.